ந.ச.பொன்னம்பலம் பிள்ளை
- பொன்னம்பலம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பொன்னம்பலம் (பெயர் பட்டியல்)
ந.ச.பொன்னம்பலம் பிள்ளை (1836 -1897) இலங்கையைச் சேர்ந்த புராண சொற்பொழிவாளர், தமிழாசிரியர், உரையாசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
ந.ச.பொன்னம்பலம் பிள்ளை யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள நல்லூரில் 1836-ல் பிறந்தார். தந்தை சரவணமுத்து செட்டியார், ஆறுமுக நாவலரின் மருகன். தந்தையிடமும், நல்லூர் கார்த்திகேய உபாத்தியாயரிடமும் தமிழ்க்கல்வி கற்றார்.
ஆறுமுகநாவலரிடம் நன்னூல் காண்டிகையுரை, திருவிளையாடல் புராணம், திருக்குறள் பரிமேலழகர் உரை, கந்தபுராணம், பாரதம், கம்பராமாயணம், தொல்காப்பியம் , இலக்கண கொத்து, இலக்கண விளக்க சூறாவளி முதலான நூல்களைக் கற்றார்.
சிதம்பரத்தில் ஆறுமுக நாவலர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். திருமணம் செய்துகொள்ளவில்லை.
இலக்கியப் பங்களிப்பு
ந.ச.பொன்னம்பலம் பிள்ளை மயூரகிரி புராணம், வில்லிபுத்தூரார் பாரதத்தின் ஆதிபர்வம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதினார்.
மறைவு
ந.ச.பொன்னம்பலம் பிள்ளை 1897-ல் காலமானார்.
உசாத்துணை
- தமிழ்ப் புலவர் வரிசை எட்டாம் புத்தகம், சு அ இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1955
- மயூரகிரி புராணம், வேதாந்த சுப்ரமணிய பிள்ளை, யாழ்ப்பாணம் சைவப்பிரகாச இயந்திர சாலை, 1937
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
04-Nov-2023, 01:47:53 IST