under review

நொண்டி நாடக நூல்கள்

From Tamil Wiki

கள்ளர்‌ குலத்தில்‌ பிறந்து, திருட்டுத்‌ தொழிலை‌ மேற்கொண்டு, தீமைகள்‌ பல செய்து, மாறுகால்‌, மாறுகை வாங்கப்பட்ட நொண்டி ஒருவன்,‌ மனம்‌ திருந்தி இறைவனை வேண்டிக்‌ காலைப்‌ பெறுவதாகப் பாடப்படுவது நொண்டி நாடகம். தலத்தின் பெயராலும், தலம், இறைவன் இரண்டின் பெயராலும், நொண்டிக்கு அருள் செய்த இறைவனின் பெயராலும், நொண்டியைக் காத்த வள்ளல் பெயராலும், நொண்டி பெற்ற ஞானத்தின் பெயராலும் நொண்டி நாடகங்களின் பெயர் அமையும்.

தமிழ் நொண்டி நாடக நூல்களில் சில நூல்களாக அச்சேறியுள்ளன. சில இன்னமும் ஓலைச்சுவடி வடிவிலேயே உள்ளன. சில நொண்டி நாடக நூல்களின் பெயர் மட்டுமே தெரியவருகின்றன.

நொண்டி நாடக நூல்கள் பட்டியல்

அச்சில் வெளிவந்தவை
எண் நூல் பெயர் ஆசிரியர் பெயர்
1 அலிப்புரம் நொண்டி நாடகம் ந.கந்தசாமி, ஊமையம்பட்டி
2 இல்லற நொண்டி நாடகம் சதாசிவம் பிள்ளை
3 சீதக்காதி நொண்டி நாடகம் க.கந்தசாமிப்புலவர், முத்தாலங்குறிச்சி
4 ஞான நொண்டி நாடகம் வேதநாயகம் சாஸ்திரியார்
5 திருக்கச்சூர் நொண்டி நாடகம் மதுரகவிராயர், அமரம்பேடு
6 திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணியர் நொண்டி நாடகம் க.கந்தசாமிப் புலவர், முத்தாலங்குறிச்சி
7 திருப்புல்லாணி நொண்டி நாடகம் கவி வீரராகவையங்கார்
8 திருமலையாதிபன் நொண்டி நாடகம் மன்னர்பெருமாள்
9 திருவிடைமருதூர் நொண்டி நாடகம் புலவர் ஸ்ரீ அனந்தபாரதி
10 திங்களூர் அருள்மலை நொண்டி நாடகம் கு. அவிநாசிப் புலவர்
அச்சில் வெளிவராமல் சுவடி வடிவில் உள்ளவை
எண் நூல் பெயர் சுவடி அமைவிடம்/ சுவடி எண்
1 ஆதிமூலேசர் நொண்டி நாடகம் சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம், சுவடி எண்:R2711, R7484
2 'கும்பினி' நொண்டி நாடகம் கேரளப் பல்கலைக் கழக நூலகம், சுவடி எண்:8853
3 குமாரமுத்தையன் நொண்டி நாடகம் கேரளப் பல்கலைக் கழக நூலகம், சுவடி எண்:8441
4 குளத்தூரய்யன் நொண்டி நாடகம் கேரளப் பல்கலைக் கழக நூலகம், சுவடி எண்:11611
5 குன்றக்குடி குமரன் நொண்டி நாடகம் சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம், சுவடி எண்:R4762, R4837
6 சாத்தூர் நொண்டி நாடகம் உ.வே.சா. நூலகம், சுவடி எண்: 1298a
7 சாத்தூரப்பன் நொண்டி நாடகம் சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம். சுவடி எண்:3222A
8 சூரனூர் நொண்டி நாடகம் தமிழ்ப் பல்கலைக் கழகம், சுவடி எண்:2769
9 செந்தில்வேலவர் நொண்டி நாடகம் உ.வே.சா. நூலகம், சுவடி எண்:68-IIG
10 திருக்குடந்தை சாரங்கபாணி நொண்டி நாடகம் உ.வே.சா. நூலகம், சுவடி எண்:348(579)
11 பழனி நொண்டி நாடகம் சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம், சுவடி எண்:D494, D495, R3017
12 புல்வயல் குமரேசர் நொண்டி நாடகம் சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம், சுவடி எண்:1248, 2109
அறியப்படும் பிற நொண்டி நாடக நூல்கள்
எண் நூல் பெயர் ஆசிரியர்
1 அகிலாண்டேசுவரி பேரில் நொண்டி நாடகம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை.
2 அவிநாசி நொண்டி நாடகம் குழந்தைக் கவுண்டர்
3 ஆதிமூலேசர் நொண்டி நாடகம் குழந்தைக் கவுண்டர்
4 கடம்பர் கோயில் நொண்டி நாடகம் மதுரைநாயகம் பிள்ளை, கடம்பர்கோயில்
5 சாளுவராய நொண்டி நாடகம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை.
6 திருக்கச்சி நம்பி நொண்டி நாடகம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை.
7 திருக்குருகூர் நொண்டி நாடகம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை.
8 திருத்தணிகை நொண்டி நாடகம் முத்துராமக்கவிராயர், கோவளம்
9 திருமந்திரம் நொண்டி நாடகம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை.
10 திருவனந்தபுரம் நொண்டி நாடகம் க.கந்தசாமிப்புலவர், முத்தாலங்குறிச்சி
11 தில்லைவிடங்கன் ஐயனார் நொண்டி நாடகம் மாரிமுத்துப்பிள்ளை, தில்லைவிடங்கன்
12 நொண்டி நாடகம் சி.சின்னத்தம்பிப் புலவர், யாழ்ப்பாணம்
13 நொண்டி நாடகம் சீத்தாம் பிள்ளைப்புலவர், இலங்கை
14 பழநி நொண்டி நாடகம் கி.நாராயணப்பிள்ளை
15 புதுவை நொண்டி நாடகம் திருவாமாத்தூர் தண்டபாணி சுவாமிகள்
16 பொக்கவாயன் நொண்டி நாடகம் அம்பலம்
17 மதுரகவிராயர் நொண்டி நாடகம் அப்துல் கறீம் சாகிப்
18 வீரசேனன் நொண்டி நாடகம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை.


உசாத்துணை


✅Finalised Page