நிச்சல ராமானந்த சுவாமிகள்
From Tamil Wiki
நிச்சல ராமானந்தர் சுவாமிகள் (19 ஆம் நூற்றாண்டு) மெய்யியல் அறிஞர். வள்ளலார் மரபைச் சேர்ந்தவர்.காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்டு வாழ்ந்வார் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த இவர், வேதாந்த தத்துவங்களை விளக்கும் பல ஆன்மீக நூல்களை இயற்றியுள்ளார்.
இலக்கியம், மெய்யியல்
நிச்சல ராமானந்தர் வேதாந்த மரபைச் சேர்ந்தவர். பின்னாளில் இராமலிங்க வள்ளலார் மரபின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்டவரானார். இவர் ஆக்கங்களை வெளியிட கோ. வடிவேலு செட்டியார் ஆதரவளித்தார்.
நூல்கள்
- ஞானாயி போதம் (1905)
- மோக்ஷசாதன விளக்கம் (1906)
- சொரூபாநுபூதிக் கொம்மி
- திருமலை நாராயண மாலை
- நாகப்பூர் மகான் முருகானந்தசுவாமிகள்
- அனுபவானந்த தீபிகை