under review

நாள் மங்கலம்

From Tamil Wiki

நாள் மங்கலம் பாடாண் திணையின் துறைகளில் ஒன்று. பிறந்தநாளின் சிறப்பு என்பது இதன் பொருள். அரசனின் பிறந்த நாளைக் கொண்டாடும் மரபு இத்துறையில் கூறப்படுகிறது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் தருமத்தினை விளைக்கும் செங்கோலினையும் அருளினையும் கொண்ட அரசனின் பிறந்த நாளின் தன்மையைச் சொல்லுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

 அறம் தரு செங்கோல் அருள் வெய்யோன்
பிறந்த நாள் சிறப்பு உரைத்தன்று (9.24)

வெண்பா

கரும்பகடும் செம்பொன்னும் வெள்ளணிநாள் பெற்றார்
விரும்பி மகிழ்தல் வியப்போ - சுரும்பிமிழ்தார்
வெம்முரண் வேந்தரும் வெள்வளையார் தோள்விழைந்து
தம்மதில் தாம்திறப்பர் தாள்

பொருள்: மன்னன் பிறந்த நாளிலே யானையையும் பொன்னையும் பெற்றவர்கள் மகிழ்தல் சிறப்பாகுமோ? பகை மன்னர்கள் கூட அச்சம் நீங்கித் தமக்குரிய பெண்களின் தோள்களைத் தழுவத் தாம் அடைத்திருந்த கோட்டையின் தாள்களைத் தாமே திறப்பது அல்லவா சிறப்பு! - எடுத்துக்காட்டு வெண்பா, மன்னனின் பிறந்த நாள் சிறப்பைக் காட்டுகிறது.

உசாத்துணை

பாடாண் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Mar-2025, 11:59:05 IST