நாராயணபிள்ளை
From Tamil Wiki
- நாராயணன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நாராயணன் (பெயர் பட்டியல்)
நாராயணபிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
நாராயணபிள்ளை புலோலியூரையடுத்த வல்லிபுரக் கோயிலை அடுத்துள்ள வல்லிபுரத்தில் பிறந்தார். வல்லிபுரம் சிதம்பரநாதர் என அழைக்கப்பட்டார்.
இலக்கிய வாழ்க்கை
நாராயணபிள்ளை 'விஷ்ணு தூஷண பரிகாரம்', 'கெளளிநூற் றெளிவு', 'சிவதூடண பரிகாரம்' ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டார்.
நூல் பட்டியல்
- விஷ்ணு தூஷண பரிகாரம் (1885)
- கெளளி நூற்றெளிவு (1885)
- சிவதூடண பரிகாரம் (1889)
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
03-Oct-2023, 14:50:31 IST