நல்லூர்ச் சிறுமேதாவியார்
From Tamil Wiki
- சிறுமேதாவியார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சிறுமேதாவியார் (பெயர் பட்டியல்)
நல்லூர்ச் சிறுமேதாவியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். நற்றிணையில் இவரது பாடல் ஒன்று இடம்பெறுகிறது.
வாழ்க்கைக் குறிப்பு
நல்லூர்ச் சிறுமேதாவியார் சங்க காலத்தைச் சேர்ந்த புலவர். நல்லூர் என்பது ஊர்ப்பெயர். மேதைமை உடையதால் மேதாவியார் என அழைக்கப்பட்டதாக அறிஞர்கள் கருதினர்.
இலக்கிய வாழ்க்கை
நல்லூர்ச் சிறுமேதாவியார் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் 282-ஆவது பாடலாக உள்ளது.
பாடல் வழி அறிய வரும் செய்திகள்
- வளையல்கள் தளர்தல், அல்குல் வரிப்பு வாடுதல், நெற்றி அழகை இழத்தல் ஆகியவை காதல் நோயின் ஆறிகுறிகளாக கூறப்பட்டுள்ளன.
- முகவாட்டம் அல்லது உடல் வாட்டம் ஒரு தீய நிமித்தமாகக் கருதப்பட்டு வேலனை அழைத்து கழங்கை உருட்டி குறி கேட்கும் போக்கு இருந்துள்ளது.
- உவமை: கானவன் மலைச்சாரலில் அகில் மரத்தை சுடுவதால் உருவாகும் மணக்கும் புகை மழை பொழியக் காத்திருக்கும் மேகம் போல இருக்கும்.
பாடல் நடை
- நற்றிணை 282
தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ,
கோடு ஏந்து அல்குல் அவ் வரி வாட,
நல் நுதல் சாய, படர் மலி அரு நோய்
காதலன் தந்தமை அறியாது, உணர்த்த,
அணங்குறு கழங்கின் முது வாய் வேலன்
கிளவியின் தணியின், நன்றுமன் சாரல்
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை,
ஆடு மழை மங்குலின், மறைக்கும்
நாடு கெழு வெற்பனொடு அமைந்த, நம் தொடர்பே?
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
23-Sep-2023, 06:43:55 IST