under review

நரேன்

From Tamil Wiki
நரேன்

நரேன் (பிறப்பு: அக்டோபர் 20, 1982) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர்.

வாழ்க்கைக்குறிப்பு

நரேன் திருவலம், இராணிப்பேட்டையில் மணி, சசிகலா இணையருக்கு அக்டோபர் 20, 1982-ல் பிறந்தார்.

பெற்றோர் இருவரும் தலைமை அஞ்சலக அதிகாரிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். உடன்பிறந்தவர் ஒரு தங்கை. நரேன் இராணிப்பேட்டை பெல் D.A.V. பள்ளியில் உயர்நிலைக்கல்வி பயின்றார். சிப்காட் இராணிப்பேட்டை சி.எஸ்.ஐ பள்ளியில் மேல்நிலைக்கல்வி பயின்றார். காஞ்சிபுரம் ஏனாத்தூர் காஞ்சி ஶ்ரீ சங்கரா கலை அறிவியல் கல்லூரியில் கணிணி பயன்பாட்டியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் முதுநிலைப்பட்டம் பெற்றார். கோயம்புத்தூர் காக்னிஸண்ட்டில் தலைமை மேலாளாராக உள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

நரேனின் முதல் படைப்பு 2016-ல் ஹெமிங்வேயின் 'பாலத்தில் ஒரு கிழவன்' என்ற சிறுகதையின் மொழிபெயர்ப்பு சொல்வனம் இதழிலில் வெளியானது. கல்லூரி காலத்தில் விகடன் மாணவப்பத்திரிக்கையாளராக காஞ்சிபுரம், வேலூர் மாவட்டத்தின் வாழ்க்கைக் கதைகளை கட்டுரைகளாக விகடன் குழும இதழ்களில் எழுதினார். கல்லூரி காலங்களில் நாடகங்கள் எழுதி மாநில அளவில் அரங்காற்றுகை செய்து நடித்துள்ளார். நரேனின் முதல் நூல் 'இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்' மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பு 2020-ல் யாவரும் பதிப்பகம் வெளியீடாக வந்தது. நரேனின் மொழிபெயர்ப்பு சிறுகதைகள், கட்டுரைகள் ஜெயமோகன் தளம், சொல்வனம், கனலி, யாவரும், வல்லினம் ஆகிய இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன. இலக்கிய விமர்சனங்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எழுதி வருகிறார். ஜெயமோகன், நாஞ்சில் நாடன், ஐசக் பாஷ்விஸ் சிங்கர், பால்ஸாக் ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார்.

அமைப்புப் பணிகள்

நரேன் 2018-ல் கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தை நிறுவி மாதக் கூடுகைகள் நடத்தி வருகிறார். கல்லூரிகளில் நவீன தமிழிலக்கியத்தை முன்வைத்து மாணவர்களுடன் உரை நிகழ்த்துகிறார்.

நூல் பட்டியல்

மொழிபெயர்ப்பு
  • இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்
  • கிருமி (2023)
படைப்புகள் இடம்பெற்றிருக்கும் தொகுப்பு நூல்கள்
  • அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழ் (கனலி)
  • ஜப்பானிய இலக்கியச் சிறப்பிதழ் (கனலி)

இணைப்புகள்


✅Finalised Page