under review

நட்டுவச் சுப்பையனார்

From Tamil Wiki
கனகி புராணம்

நட்டுவச் சுப்பையனார் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

நட்டுவச் சுப்பையனார் இலங்கை யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் பிறந்தார். மேளக்கார வகுப்பைச் சேர்ந்தவர். இளமையில் தெல்லிப்பழையிலிருந்த அமெரிக்க மிஷனரிமாரைச் சேர்ந்து கிறித்தவராக சிலகாலம் இருந்தார். பின் சைவசமயத்தவராக மாறி, தனது இறுதிக்காலம் வரை சைவராகவே இருந்தார். கோயிற்பற்றைச் சேர்ந்த ஏழாலையில் திருமணம் செய்து அவ்வூரில் வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

வண்ணார்பண்ணைச் சிவன் கோயிலில் அக்காலத்திலிருந்த தாசிகளுள் ஒருத்தியாகிய 'கனகி' பேரில் கனகி புராணம் பாடினார். இந்நூல் முழுவதும் கிடைக்கவில்லை. கனகி புராணம் 1931-ல் சென்னை ஒற்றுமை ஆபீஸ் வெளியீடாக பதிப்பிக்கப்பட்டது. இத்தொகுப்பில் காப்புச் செய்யுள் நீங்கலாக நாட்டுப்படலம்(16), சுயம்வரப்படலம் (11), வெட்டைகாண் படலம் (1) எனும் பிரிவுகளில் இருபத்தியெட்டு பாடல்கள் உள்ளன.

நவாலியூர் ந.சி. கந்தையாபிள்ளை தமக்குக் கிடைத்த கவிதைகள் சிலவற்றைத் தொகுத்து 1937-ல் வெளியிட்டார். வட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் முந்தய கவிதைளுடன் தமக்குக் கிடைத்த கவிதைளையும் வைத்து ஆராய்ந்து, பொழிப்புரை குறிப்புரைகளுடன் பதிப்பினை 1961-ம் ஆண்டில் வெளியிட்டார். இருப்பினும் முழுமையான நூல் கிடைக்கவில்லை.

பாடல் நடை

  • விருத்தம்

காட்டுக் குயிலைக் கடிதோட்டிக் கனத்த நாவி னெய்தடவி
மாட்டு மினிய சொல்லாளே மானே தேனே கனகமின்னே
ஒட்டைக் காதினுடனிருந்திங்கு வந்தே புடைவை விற்கின்ற
நாட்டுக் கோட்டைச் செட்டிகளி னல்லாண் டப்பணிவன்கானே?

நூல் பட்டியல்

  • கனகி புராணம்

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page