under review

தொல்காப்பியக் கடலின் ஒரு துளி

From Tamil Wiki
தொல்காப்பியக் கடலின் ஒரு துளி.jpg

தொல்காப்பியக் கடலின் ஒரு துளி செ. சீனி நைனா முகம்மது எழுதிய இலக்கண நூல். தொல்காப்பியத்தின் இலக்கண விதிகளை விளக்கி எழுதப்பட்டது.

பதிப்பு, வெளியீடு

இந்நூல் செ. சீனி நைனா முகம்மதின் இறப்புக்குப் பின் 2015-ம் ஆண்டு உங்கள்குரல் பதிப்பகம் வழி வெளியீடு கண்டது.

ஆசிரியர்

செ. சீனி நைனா முகம்மது, ஆய்வாளர், கவிஞர், பேச்சாளர், இதழாசிரியர். இலக்கணப் பயிலரங்குகள், கவிதைப் பட்டறைகளோடு நாடெங்கும் தொல்காப்பிய வகுப்பும் நடத்தி வந்தார். இவரை ஆசிரியராகக் கொண்டு, உங்கள் குரல் என்னும் இலக்கண இலக்கிய சிற்றிதழை பதினைந்து ஆண்டுகளாக வெளிந்தது.

தோற்றம்

மலேசிய தமிழ் வானொலி நிலையமான மின்னல் பண்பலையில் 'அமுதே தமிழே' நிகழ்ச்சியில் டிசம்பர் 2010 முதல் ஒலியேறிய இலக்கணத் தொடர் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலுருவாக்கம் கண்டது. இக்கட்டுரைகளில் பலவற்றை நூலாசிரியரே தம் குரலில் வானொலி நிகழ்ச்சியில் வாசித்தார். இந்த எழுத்திலக்கணக் கட்டுரைகள் வானொலியில் முழுமையாக ஒலியேற்றப்படாமல் பாதியில் நிறுத்தப்பட்டன. பின், உங்கள் குரல் ஆசிரியர் சு. கமலாவின் வேண்டுகோளுக்கிணங்க மீதி கட்டுரைகளும் நூலாசிரியரால் எழுதி முடிக்கப்பட்டன.

நூல் அமைப்பு

இந்நூல் 156 கட்டுரைகள் அடங்கியது. இக்கட்டுரைகளில் தொல்காப்பிய இலக்கண விதிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் 'துளி' எனற முன்னொட்டைக் கொண்டிருந்தது (துளி 1 முதல் துளி 156 வரை).

சிறப்புகள்

  • தொல்காப்பிய எழுத்திலக்கண விதிகள், மிக எளிமையான மொழியில், இயல்பான மேற்கோள்களுடன் எழுதப்பட்டுள்ளன.
  • தொல்காப்பிய இலக்கண விதிகள் தனிக் கட்டுரைகளாக விரிவாக எழுதப்பட்டுள்ளது.
  • தொல்காப்பியம், திருக்குறள் போன்ற பழந்தமிழ் நூல்களின் வரலாறு, தனிச்சிறப்புகள் போன்ற தகவல்களைக் கொண்டது.
  • மக்களின் அன்றாட வாழ்க்கையில் தமிழ்ச் சொற்கள் பயன்படும் பல்வேறு நுட்பமான இடங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
  • தமிழ் இலக்கணம் பயில்வோருக்கு மேற்கோள் நூலாகப் பயன்படத்தக்கது.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jul-2026, 18:45:40 IST