under review

தேவார சிவத்தலங்கள்

From Tamil Wiki

ஆழ்வார்களால் பாடப்பட்ட தலங்கள் திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுவது போல், நாயன்மார்களால் பாடப்பெற்ற சிவத்தலங்கள், தேவார சிவத்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தமிழ்நாடு தொடங்கி வடநாடு, இலங்கை வரை அமைந்திருக்கும் இத்தலங்களின் எண்ணிக்கை: 275. (276 என்ற குறிப்பும் உள்ளது)

காவிரி நதியின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்

எண் சிவத்தலம் இருப்பிடம் இறைவன் பெயர்
1 சிதம்பரம் நடராஜர்
2 திருவேட்களம் பாசுபதேஸ்வரர்
3 திருநெல்வாயல் உச்சிநாதேஸ்வரர்
4 திருக்கழிப்பாலை பால்வண்ண நாதர்
5 திருநல்லுர் பெருமணம் சிவலோக தியாகேசர்
6 திருமயேந்திரப்பள்ளி திருமேனிஅழகர்
7 தென்திருமுல்லைவாயில் முல்லைவன நாதர்
8 திருக்கலிக்காமூர் சுந்தரேஸ்வரர்
9 திருசாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேஸ்வரர்
10 திருபல்லவனீச்சுரம் பல்லவனேஸ்வரர்
11 திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்
12 கீழை திருக்காட்டுப்பள்ளி ஆரண்ய சுந்தரேஸ்வரர்
13 திருக்குருகாவூர் வெள்ளடை வெள்ளடையீஸ்வரர்
14 சீர்காழி பிரம்மபுரீசர்
15 திருகோலக்கா சத்தபுரீஸ்வரர்
16 திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்) வைத்தியநாதர்
17 திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) கண்ணாயிரநாதர்
18 திருக்கடைமுடி கடைமுடிநாதர்
19 திருநின்றியூர் மகாலட்சுமி நாதர்
20 திருபுன்கூர் சிவலோகநாதர்
21 நீடூர் அருட்சோமநாதேஸ்வரர்
22 திருஅன்னியூர் ஆபத்சகாயேஸ்வரர்
23 திருவேள்விக்குடி கல்யாணசுந்தரர்
24 திருஎதிர்கொள்பாடி ஐராவதேஸ்வரர்
25 திருமணஞ்சேரி அருள்வள்ளநாதர்
26 திருக்குருக்கை வீரட்டேஸ்வரர்
27 திருக்கருப்பறியலூர் குற்றம் பொருத்த நாதர்
28 திருக்குரக்குக்கா கோந்தல நாதர்
29 திருவாளொளிப்புத்தூர் மாணிக்கவண்ணர்
30 திருமண்ணிப்படிக்கரை நீலகண்டேசர்
31 திருஓமாம்புலியூர் துயரந்தீர்த்தநாதர்
32 திருக்கானாட்டுமுல்லூர் பதஞ்சலி நாதர்
33 திருநாரையூர் சௌந்தரேஸ்வரர்
34 திருக்கடம்பூர் அமிர்தகடேசர்
35 திருபந்தனைநல்லூர் பசுபதி நாதர்
36 திருகஞ்சனூர் அக்னீஸ்வரர்
37 திருகோடிக்கா திருக்கோடீஸ்வரர்
38 திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர்
39 திருப்பனந்தாள் தாலவனேஸ்வரர்
40 திருஆப்பாடி பாலுகந்த ஈஸ்வரர்
41 திருசேய்ஞலூர் சத்யகிரீஸ்வரர்
42 திருந்துதேவன்குடி (நண்டாங்கோவில்) கற்கடேஸ்வரர்
43 திருவியலூர் சிவயோகிநாத சுவாமி
44 திருக்கொட்டையூர் கோடீஸ்வரர்
45 திருஇன்னாம்பர் எழுத்தறிநாதர்
46 திருப்புறம்பியம் சாட்சி நாதேஸ்வரர்
47 திருவிசயமங்கை விஜயநாதர்
48 திருவைகாவூர் வில்வவனநாதர்
49 வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர்
50 திருப்பழனம் ஆபத்சகாயநாதர்
51 திருவையாறு பஞ்சநதீஸ்வரர்
52 திருநெய்த்தானம் நெய்யாடியப்பர்
53 திருப்பெரும்புலியூர் வியாக்ர புரீசர்
54 திருமழபாடி வஜ்ரதம்ப நாதர்
55 திருப்பழுவூர் ஆலந்துறையார்
56 திருக்கானூர் செம்மேனி நாதர்
57 திருஅன்பில் ஆலாந்துறை சத்யவாகீஸ்வரர்
58 திருமாந்துறை ஆம்பிரவன நாதர்
59 திருபாற்றுறை ஆதிமூலநாதர்
60 திருவானைக்கா ஜம்புகேஸ்வரர்
61 திருபைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர்
62 திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) மாற்றுறை வரதீஸ்வரர்
63 திருஈங்கோய்மலை மரகதாசலேஸ்வரர்

காவிரி நதியின் தென்கரையிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்

64 திருவாட்போக்கி ரத்தினகிரிநாதர்
65 திருகடம்பந்துறை கடம்பவனேஸ்வரர்
66 திருப்பராய்த்துறை பராய்த்துறை நாதர்
67 திருகற்குடி உஜ்ஜீவ நாதர்
68 திருமூக்கீச்சரம் (உறையூர், திருச்சி) பஞ்சவர்னேஸ்வரர்
69 திருச்சிராப்பள்ளி தாயுமானவர்
70 திருஎறும்பியூர் (திருவெறும்பூர்) எறும்பீசர்
71 திருநெடுங்களம் நித்யசுந்தரேஸ்வரர்
72 மேலை திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர்
73 திருவாலம்பொழில் ஆத்மநாதேஸ்வரர்
74 திருபூந்துருத்தி புஷ்பவன நாதர்
75 திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீசர்
76 திருசோற்றுத்துறை ஓதவனேஸ்வரர்
77 திருவேதிகுடி வேதபுரீஸ்வரர்
78 திருதென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர்
79 திருபுள்ளமங்கை ஆலந்துறை நாதர்
80 திருசக்கரப்பள்ளி (அய்யம்பேட்டை) சக்ரவாகேஸ்வரர்
81 திருக்கருகாவூர் முல்லைவன நாதர்
82 திருப்பாலைத்துறை பாலைவன நாதர்
83 திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர்
84 ஆவூர் பசுபதீச்சரம் பசுபதீஸ்வரர்
85 திருசத்திமுற்றம் சிவகொழுந்தீசர்
86 திருபட்டீச்சரம் தேனுபுரீஸ்வரர்
87 பழையாறை வடதளி சோமேஸ்வரர்
88 திருவலஞ்சுழி கற்பகநாதர்
89 திருக்குடமூக்கு (கும்பகோணம்) கும்பேஸ்வரர்
90 திருக்குடந்தை கீழ்கோட்டம் நாகேஸ்வரசுவாமி
91 திருக்குடந்தைக் காரோணம் காசி விஸ்வநாதர்
92 திருநாகேஸ்வரம் சண்பக ஆரண்யேஸ்வரர்
93 திருவிடைமருதூர் மஹாலிங்கேஸ்வரர்
94 தென்குரங்காடுதுறை ஆபத்சகாயநாதர்
95 திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர்
96 திருவைகல் மாடக்கோவில் வைகல் நாதர்
97 திருநல்லம் உமாமஹேஸ்வரர்
98 திருக்கோழம்பம் கோகிலேஸ்வரர்
99 திருவாவடுதுறை மாசிலாமனி ஈஸ்வரர்
100 திருத்துருத்தி (குத்தாலம்) உக்தவேதீஸ்வரர்
101 திருவழுந்தூர் வேதபுரீஸ்வரர்
102 மயிலாடுதுறை மயூரநாதர்
103 திருவிளநகர் உச்சிரவனேஸ்வரர்
104 திருப்பறியலூர் (பரசலூர்) வீரட்டேஸ்வரர்
105 திருசெம்பொன்பள்ளி சுவர்ணபுரீசர்
106 திருநனிபள்ளி (புஞ்ஜை) நற்றுணையப்பர்
107 திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்) வலம்புரநாதர்
108 திருதலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர்
109 திருஆக்கூர் தான்தோன்றியப்பர்
110 திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர்
111 திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர்
112 திருவேட்டக்குடி திருமேனிஅழகர்
113 திருதெளிச்சேரி (கோயில்பத்து) பார்வதீஸ்வரர்
114 திருதர்மபுரம் யாழ்மூரிநாதர்
115 திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர்
116 திருக்கோட்டாறு ஐராவதேஸ்வரர்
117 அம்பர் பெருந்திருக்கோவில் பிரம்மபுரீசர்
118 அம்பர் மாகாளம் மாகாளநாதர்
119 திருமீயச்சூர் மேகநாதசுவாமி
120 திருமீயச்சூர் இளங்கோவில் சகலபுவனேஸ்வரர்
121 திருதிலதைப்பதி மதிமுத்தீஸ்வரர்
122 திருப்பாம்புரம் பாம்பு புரேஸ்வரர்
123 சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர்
124 திருவீழிமிழிலை நேத்ரார்பனேஸ்வரர்
125 திருவன்னியூர் அக்னீஸ்வரர்
126 திருக்கருவிலிக்கொட்டிட்டை சற்குணநாதேஸ்வரர்
127 திருபேணுபெருந்துறை சிவானந்தேஸ்வரர்
128 திருநறையூர் சித்தி நாதேஸ்வரர்
129 அரிசிற்கரைப்புத்தூர் சொர்ணபுரீஸ்வரர்
130 சிவபுரம் சிவபுரநாதர்
131 திருகலயநல்லூர் அமிர்தகலசநாதர்
132 திருக்கருக்குடி சற்குணலிங்கேஸ்வரர்
133 திருவாஞ்சியம் வாஞ்சிநாதர்
134 நன்னிலம் மதுவனேஸ்வரர்
135 திருகொண்டீச்சரம் பசுபதீஸ்வரர்
136 திருப்பனையூர் சௌந்தர்யநாதர்
137 திருவிற்குடி வீரட்டானேஸ்வரர்
138 திருப்புகலூர் அக்னீஸ்வரர்
139 திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் வர்த்தமானேஸ்வரர்
140 இராமனதீச்சுரம் இராமநாதசுவாமி
141 திருபயற்றூர் திருபயற்றுநாதர்
142 திருசெங்கட்டாங்குடி உத்தராபதீஸ்வரர்
143 திருமருகல் இரத்தினகிரீஸ்வரர்
144 திருச்சாத்தமங்கை அயவந்தீஸ்வரர்
145 நாகைக் காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகனேஸ்வரர்
146 சிக்கல் நவநீதேஸ்வரர்
147 திருக்கீழ்வேளூர் கேடிலியப்பர்
148 தேவூர் தேவபுரீஸ்வரர்
149 பள்ளியின் முக்கூடல் முக்கோண நாதேஸ்வரர்
150 திருவாரூர் வன்மீக நாதர்
151 திருவாரூர் அறநெறி அறனெறியப்பர்
152 ஆரூர் பறவையுன்மண்டளி தூவாய் நாயனார்
153 திருவிளமர் பதஞ்சலி மனோஹரர்
154 திருக்கரவீரம் கரவீரநாதர்
155 திருப்பெருவேளூர் அபிமுக்தீஸ்வரர்
156 திருதலையாலங்காடு ஆடவல்லீஸ்வரர்
157 திருக்குடவாயில் கோனேஸ்வரர்
158 திருச்சேறை செந்நெறியப்பர்
159 திருநாலூர் மயானம் ஞானபரமேஸ்வரர்
160 திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் சொர்ணபுரீசுவரர்
161 திருஇரும்பூளை (ஆலங்குடி) ஆபத்சகாயேஸ்வரர்
162 திருஅரதைப் பெரும்பாழி (ஹரித்துவார மங்கலம்) பாதாளேஸ்வரர்
163 திருஅவளிவநல்லூர் சாட்சி நாநர்
164 திருப்பரிதிநியமம் பரிதியப்பர்
165 திருவெண்ணியூர் வெண்ணிக்கரும்பர்
166 திருப்பூவனூர் புஷ்பவனநாதர்
167 திருப்பாதாளீச்சரம் சர்ப்பபுரீஸ்வரர்
168 திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர்
169 திருசிற்றேமம் பொன்வைத்த நாதேஸ்வரர்
170 திருவுசத்தானம் மந்திர புரீஸ்வரர்
171 திருஇடும்பாவனம் சற்குணநாதேஸ்வரர்
172 திருக்கடிக்குளம் கற்பகநாதர்
173 திருத்தண்டலை நீணெறி நீணெறிநாதர்
174 திருக்கோட்டூர் கொழுந்தீசர்
175 திருவெண்டுறை வெண்டுறைநாதர்
176 திருக்கொள்ளம்புதூர் வில்வவனேஸ்வரர்
177 திருப்பேரெயில் ஜகதீஸ்வரர்
178 திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர்
179 திருத்தெங்கூர் வெள்ளிமலைநாதர்
180 திருநெல்லிக்கா நெல்லிவனேஸ்வரர்
181 திருநாட்டியாத்தான்குடி மாணிக்கவண்ணர்
182 திருக்காறாயில் கண்ணாயிரநாதர்
183 திருகன்றாப்பூர் நடுதறியப்பர்
184 திருவலிவலம் மனத்துனைநாதர்
185 திருகைச்சினம் கைசின நாதேஸ்வரர்
186 திருக்கோளிலி கோளிலிநாதர்
187 திருவாய்மூர் வாய்மூர்நாதர்
188 திருமறைக்காடு (வேதாரண்யம்) மறைக்காட்டு மணாளர்
189 அகத்தியான்பள்ளி அகஸ்தீஸ்வரர்
190 திருக்கோடி (கோடியக்கரை) அமிர்தகடேஸ்வரர்
191 திருவிடைவாசல் புண்ணியகோடியப்பர்

நடு நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்

192 திருநெல்வாயில் அரத்துறை தீர்த்தபுரீஸ்வரர்
193 தூங்கானை மாடம் (பெண்ணாகடம்) சுடர்கொழுந்தீசர்
194 திருக்கூடலையாற்றூர் நர்த்தன வல்லபேஸ்வரர்
195 திருஎருக்கத்தம்புலியூர் திருநீலகண்டேஸ்வரர்
196 திருத்திணை நகர் சிவக்கொழுந்தீசர்
197 திருச்சோபுரம் சோபுரநாதர்
198 திருவதிகை அதிகை வீரட்டநாதர்
199 திருநாவலூர் திருநாவலேஸ்வரர்
200 திருமுதுகுன்றம் பழமலைநாதர்
201 திருநெல்வெண்ணை சொர்ணகடேஸ்வரர்
202 திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர்
203 திருஅறையணிநல்லூர் அதுல்யநாதேஸ்வரர்
204 திருவிடையாறு இடையாற்று நாதர்
205 திருவெண்ணைநல்லூர் கிருபாபுரீஸ்வரர்
206 திருத்துறையூர் சிஷ்டகுருநாதர்
207 வடுகூர் பஞ்சநதீஸ்வரர்
208 திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர்
209 திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்
210 திருமுண்டீஸ்வரம் சிவலோகநாதர்
211 புறவர் பனங்காட்டூர் பனங்காட்டீஸ்வரர்
212 திரு ஆமாத்தூர் அழகிய நாதர்
213 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்
214 கிளியனூர் அகத்தீஸ்வரர்

கொங்கு நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்

215 திருநணா (பவானி) சங்கமேஸ்வரர்
216 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்
217 கருவூர் (கரூர்) பசுபதிநாதர்
218 திருமுருகப்பூண்டி திருமுருகநாதசுவாமி
219 கொடுமுடி கொடுமுடிநாதர்
220 திருப்புக்கொளியூர் (அவிநாசி) அவிநாசியப்பர்
221 வெஞ்சமாக்கூடல் விகிர்தநாதேஸ்வரர்

பாண்டிய நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்

222 திருஆலவாய் (மதுரை) சொக்கநாதர்
223 திருஆப்பனுர் ஆப்புடையார்
224 திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர்
225 திருவேடகம் ஏடகநாதேஸ்வரர்
226 திருகொடுங்குன்றம் கொடுங்குன்றீசர்
227 திருப்புத்தூர் திருத்தளிநாதர்
228 திருப்புனவாயில் பழம்பதிநாதர்
229 இராமேஸ்வரம் (ஜோதிர்லிங்க ஸ்தலம்) இராமநாதசுவாமி
230 திருவாடானை ஆடானைநாதர்
231 திருக்கானப்பேர் (காளையார்கோவில்) காளையப்பர்
232 திருப்பூவனம் புஷ்பவனேஸ்வரர்
233 திருச்சுழியல் திருமேனிநாதர்
234 குற்றாலம் குறும்பலாநாதர்
235 திருநெல்வேலி நெல்லையப்பர்

தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்

236 கச்சி ஏகம்பம் (காஞ்சீபுரம்) ஏகாம்பரேஸ்வரர்
237 திருக்கச்சி மேற்றளி திருமேற்றளிநாதர்
238 திருஓணக்காந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர்
239 கச்சி அநேகதங்காபதம் அநேகதங்கா பதேஸ்வரர்
240 கச்சிநெறிக் காரைக்காடு காரை திருநாதேஸ்வரர்
241 திருகுரங்கணில் முட்டம் வாலீஸ்வரர்
242 திருமாகறல் அடைக்கலம்காத்த நாதர்
243 திருவோத்தூர் வேதபுரீஸ்வரர்
244 திருப்பனங்காட்டூர் பனங்காட்டீஸ்வரர்
245 திருவல்லம் வில்வநாதேஸ்வரர்
246 திருமாற்பேறு மணிகண்டேஸ்வரர்
247 திருஊறல் (தக்கோலம்) ஜலநாதேஸ்வரர்
248 இலம்பையங்கோட்டூர் சந்திரசேகரர்
249 திருவிற்கோலம் திரிபுரநாதர்
250 திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர்
251 திருப்பாசூர் வாசீஸ்வரர்
252 திருவெண்பாக்கம் ஊண்றீஸ்வரர்
253 திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர்
254 திருவொற்றியூர் (சென்னை) ஆதிபுரீசர், படம்பக்கநாதர்
255 திருவலிதாயம் வலிதாய நாதர்
256 திருமுல்லைவாயில் மாசிலாமணி ஈஸ்வரர்
257 திருவேற்காடு வேதபுரீஸ்வரர்
258 திருமயிலை (சென்னை) கபாலீஸ்வரர்
259 திருவான்மியூர் (சென்னை) மருந்தீஸ்வரர்
260 திருக்கச்சூர் ஆலக்கோவில் கச்சபேஸ்வரர்
261 திருஇடைச்சுரம் ஞானபுரீஸ்வரர்
262 திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர்
263 அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர்
264 திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர்
265 திருஅரசிலி அரசிலிநாதர்
266 இரும்பை மாகாளம் மாகாளேஸ்வரர்

வட நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்

267 திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) மல்லிகார்ஜுனேஸ்வரர்
268 இந்திரநீலப்பருப்பதம் (நீலகண்டசிகரம்) நீலாசலநாதர்
269 அனேகதங்காவதம் (கௌரிகுண்டம்) அனேகதங்காவதேஸ்வரர்
270 திருக்கேதாரம் (கேதார்நாத்) கேதாரீஸ்வரர்
271 நொடித்தான்மலை (திருக்கயிலாயம்) கயிலைநாதர்

மலை நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்

272 திருவஞ்சைக்களம் மகாதேவர்

துளுவ நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்

273 திருகோகர்ணம் (கோகர்ணா) கோகர்ணேஸ்வரர்

ஈழ நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்

274 திருக்கோணமலை திருக்கோணேஸ்வரர்
275 திருக்கேதீச்சுரம் திருக்கேதீசுவரர்

உசாத்துணை


✅Finalised Page