under review

திரு இரட்டைமணிமாலை

From Tamil Wiki

சிவபெருமானின் சிறப்புகளைப் புகழ்ந்து காரைக்கால் அம்மையார் பாடிய திரு இரட்டைமணிமாலை (திருவிரட்டைமணிமாலை), இரட்டைமணிமாலை என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த பாடல். இது சைவத்திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

பாடல் அமைப்பு

இருபது பாடல்களைக் கொண்ட இந்நூல் அந்தாதித் தொடையில் அமைந்தது. வெண்பாவும், கட்டளைக் கலித்துறையுமாய் இந்நூல் அமைந்துள்ளது. இருவிதப் பாவகையால் இயற்றப்படும் இரட்டைமணிமாலை என்னும் இலக்கிய வகைக்கு திருவிரட்டைமணிமாலையே முன்னோடியாகக் கருதப்படுகிறது. கட்டளைக் கலித்துறை யாப்பை முதன்முதல் கையாண்டவரும் காரைக்கால் அம்மையே என்று கருதப்படுகிறார்.

பாடல் எடுத்துக்காட்டு

தொல்லை வினைவந்து சூழாமுன் தாழாமே
ஒல்லை வணங்கி உமையென்னும் - மெல்லியல்ஓர்
கூற்றாகக் கூற்றுருவம் காய்ந்தானை வாய்ந்திலங்கு
நீற்றானை நெஞ்சே நினை

(திருவிரட்டை மணிமாலை - 12)

(தொல்லை = பழைய; தாழாமே = காலம் தாழ்த்தாமல் ஒல்லை= விரைவாக; கூற்று = எமன்)

பழைய வினை வந்து சூழ்ந்து கொள்வதற்கு முன்பாகவே உமைஒரு பாகத்தினனாய்த் திகழும் சிவனை நெஞ்சமே நீ நினைப்பாயாக என்று நெஞ்சுக்கு அறிவுரை கூறுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page