under review

தனலஷ்மி சிவயோகி சர்மா

From Tamil Wiki
சர்மா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சர்மா (பெயர் பட்டியல்)

தனலஷ்மி சிவயோகி சர்மா (பிறப்பு: மார்ச் 14, 1982) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

தனலஷ்மி சிவயோகி சர்மா இலங்கை நாட்டின் வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் முத்துக்குமாரக் குருக்கள், அற்புதராணி இணையருக்கு மார்ச் 14, 1982-ல் பிறந்தார். யாழ்ப்பாணம் அமெரிக்க மிஷன் பாடசாலையில் ஆரம்பக் கல்வி பயின்றார். இடைநிலைக் கல்வியை அக்கராயன் மகாவித்தியாலயத்தில் பயின்றார். உயர்கல்வியை போர் சூழல் காரணமாக தனிப்பட்ட முறையில் படித்து எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

தனலஷ்மி சிவயோகி சர்மா 2011 முதல் எழுதி வருகிறார். கவிதை, சிறுகதை பாடல்கள் எழுதியுள்ளார். ஹைக்கூ புதுக்கவிதை, குறுங்கவிதை, கிராமியக்கவிதை, தன்முனைக்கவிதை என பல வகைக் கவிதைகள் எழுதி வருகிறார். இவர் எழுதிய பாடல் இறுவட்டு வடிவில் வெளிவந்துள்ளது. , 'மனம் தொடும் மலர்கள்', 'பனிவிழும் மலர் வனம்', 'கவிச்சோலை', 'அசையும் நாணல்கள்', 'செவ்வந்தி மேலே ஒரு பனித்துளி' ஆகிய இவரது கவிதைகள் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Jun-2024, 05:18:16 IST