under review

தண்டபானி (தெருக்கூத்து)

From Tamil Wiki
தண்டபானி

தண்டபானி (தெருக்கூத்து) (பிறப்பு:1974) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர்களில் ஒருவர். நான்காவது தலைமுறை கூத்துக் கலைஞர். தெற்கத்தி பாணியைச் சேர்ந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

தண்டபானி தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள வீடூர் கிராமத்தில் 1974-ல் பிறந்தார். தந்தை செல்வராஜ். ஐந்தாம் வகுப்புவரை பயின்றார். கூத்து இல்லாத காலங்களில் விவசாயம் பார்ப்பார். நான்காவது தலைமுறை கூத்துக் கலைஞர்.

கலை வாழ்க்கை

தண்டபானியின் வாத்தியார் வீடூர் செல்வராஜ். தெற்கத்தி பாணிக் கூத்துக் கலைஞர். ஸ்ரீ முத்துமாரியம்மன் நாடக சபா, பாரததேவி நாடக சபா ஆகியவற்றில் கூத்து ஆடினார். திருவிழாக்கள், குடும்பச் சடங்கு நிகழ்வுகளில் கூத்து ஆடினார்.

பங்கேற்ற கூத்துகள்

  • மகாபாரதக் கூத்துக்கள்
  • மாயாவி அரக்கன் கூத்து
  • பத்மமாலை கூத்து
  • மாரியம்மன் கூத்து
  • அய்யனார் கூத்து

உசாத்துணை

  • தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்




✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jan-2025, 17:48:55 IST