டி.ஆர். ராமகிருஷ்ணன்
- ராமகிருஷ்ணன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராமகிருஷ்ணன் (பெயர் பட்டியல்)
டி.ஆர். ராமகிருஷ்ணன் (பாட்டா ராமகிருஷ்ணன்) (பொ.யு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் நாடக நடிகர். சங்கரதாஸ் சுவாமிகளின் பேரன். ஆண், பெண் இரு வேடங்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
டி.ஆர். ராமகிருஷ்ணன் சங்கரதாஸ் சுவாமிகளின் பேரன். சுவாமிகளின் பேரன் என்ற முறையில் நாடகக் குழுவில் உள்ள நடிகர்கள் இவரைப் பாட்டா என்று அழைத்தனர். சங்கரதாஸ் சுவாமிகளும் அவ்வாறே அழைத்தார். "பாட்டா" என்ற பெயரே நாடக உலகில் நிலைத்ததாக டி.கே.ஷண்முகம் எழுதிய எனது நாடக வாழ்க்கை நூலில் குறிப்பிட்டார்.
நாடக வாழ்க்கை
சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் முக்கியமான கதாநாயகனாக நடித்தார். ஆண், பெண் இரு வேடங்களிலும் நடித்தார். சத்தியவான் சாவித்ரி நாடகத்தில் சத்தியவானாக நடித்தார். கணீரென்ற சாரீரம் கொண்டவர். 'சீமந்தினி' நாடகத்தில் சந்திராங்கதனாகவும், அபிமன்யு சுந்தரியில் அரவானாகவும், சுலோச்சனா சதியில் ஆதிசேடனாகவும் நடித்தார். பெண் வேடங்களைப் பொறுத்து பவளக்கொடியில் அல்லியாகவும், சதி அனுசுயாவில் அனுசுயாவாகவும் நடித்தார்.
1922-ல் திண்டிவனத்தில் நாடகம் நடந்து கொண்டிருந்தபோது சங்கரதாஸ் சுவாமிகளின் கம்பெனியிலிருந்து விலகினார். அதன்பிறகு பல நாடக சபையில் நடித்தார். ஸ்பெஷல் நாடக நடிகராக சில ஆண்டுகள் இலங்கையில் இருந்தார்.
நடித்த நாடகங்கள்
- சத்தியவான் சாவித்ரி
- சீமந்தினி
- அபிமன்யு சுந்தரி
- சுலோச்சனா சதி
- சதி அனுசுயா
- பவளக்கொடி
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Jul-2024, 20:20:32 IST