ஜவாதுப் புலவர்
ஜவாதுப் புலவர் (சவ்வாதுப் புலவர்) (சவாதுப் புலவர்) (பொ.யு. 1745-1808) தமிழ்ப் புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.
வாழ்க்கைக் குறிப்பு
ஜவாதுப் புலவர் எமனீச்சரம் என்னும் ஊரில் 1745-ல் பிறந்தார். அரேபிய மொழியில் ஜவாது என்பதற்கு பெருங்கொடை வள்ளல் என்று அர்த்தம் (பூனையிலிருந்து பெறப்படும் ஒரு வாசனைத்திரவியத்துக்கும் ஜவ்வாது என்ற பெயர் உண்டு). இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த புலவர். சர்க்கரைப்புலவரின் மைத்துனர். இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
ஜவாதுப் புலவர் சேதுபதி ரகுநாயகன், விசயானந்த ரங்கன், பிரம்பூர் ஆனந்த ரங்க துரை, முத்து கிருஷ்ணன், கச்சி செல்லப்பன் ஆகிய வள்ளல்களைப் பாடினார். தனிப்பாடல் திரட்டில் இவர் பாடிய ஐந்து பாடல்கள் உள்ளன.
இலக்கிய இடம்
தமிழ்ப் புலவர் ஒருவரால் "வண்டமிழின் எண்ணோ, எழுத்தோ, இசையோ, இயல்புலவர் கண்ணோ, சவ்வாதுக் கவி" எனப் பாராட்டப்பட்டவர். வசைபாடுவதில் காளமேகப் புலவரை ஒத்து விளங்கினார். "வண்டமிழ் சவ்வாது வாயெல்லாம் நஞ்சே" என்பர். ஒருமுறை இவருக்குப் பண உதவி செய்ய மறுத்த சேஷையங்கார் என்பவரைச் சினத்துடன்,
வீசம் பணம் கொடுக்காத சேசா
வீரியம் பாம்பு கடித்துச் சாசா
என்று சபிக்க அன்றே அவர் பாம்பு கடித்து இறந்ததாக செவிவழிச்செய்தி உள்ளது.
பாடல் நடை
- தனிப்பாடல்
செல்லப்பன் கச்சியிலே சேர்ந்ததற்பி னமணிகள்
நல்லதரு மேக நவநிதியம-சொல்லவே
முட்டின்றி யொன்றிரண்டு மூன்றுநான் கைந்தாறேழ்
எட்டொன்பான் பத்தான வே
மறைவு
ஜவாதுப் புலவர் 1808-ல் பரமக்குடியில் காலமானார்.
நூல் பட்டியல்
- முகைதீன் ஆண்டவர் பிள்ளைத்தமிழ்
- நாகைக் கலம்பகம்
- மதீனத்தந்தாதி
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
04-Sep-2023, 07:57:04 IST