under review

ச. ரங்கநாதன்

From Tamil Wiki
ச. ரங்கநாதன்

ச. ரங்கநாதன் (பிறப்பு: 1932) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர்களில் ஒருவர். எறையூர் வெங்கடேசன் சபாவின் வாத்தியார்.

வாழ்க்கைக் குறிப்பு

ச. ரங்கநாதன் விழுப்புரத்திலுள்ள வானூரில் 1932-ல் பிறந்தார். இவரின் முப்பாட்டன், பாட்டன், தாத்தா, அப்பா ஆகியோரும் கூத்துக் கலைஞர்கள். ஐந்தாம் வகுப்பு வரை கல்வி கற்றார். கூத்து இல்லாத காலங்களில் விவசாயம் பார்ப்பார்.

கலை வாழ்க்கை

ச. ரங்கநாதன் வெங்கடேசன் வாத்தியாரிடம் கூத்து கற்றார். பல குழுக்களில் கூத்து ஆடினார். எறையூர் வெங்கடேசன் சபாவின் வாத்தியார். நாற்பது வருடங்களுக்கும் மேலாக வாத்தியாராக அனுபவமுள்ளவர். செல்லியம்மன் திருவிழா, திரெளபதி அம்மன் திருவிழா, முருகன் காவடி திருவிழா, குடும்ப விழாக்களில் கூத்து ஆடினார். வானூர், ஆலப்பாக்கம், ஓட்டை, சிங்கனூர், பதிரிப்புலியூர், எறையூர், ஏமாளசூர், மரக்காணம், கரசானூர், வீடூர் ஆகிய இடங்களில் கூத்து ஆடியுள்ளார்.

பங்கேற்ற கூத்துகள்

  • மகாபாரதக் கூத்துக்கள்
  • ராமாயணம்

உசாத்துணை

  • தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 14:27:32 IST