under review

சே. கல்பனா

From Tamil Wiki
சே. கல்பனா

சே. கல்பனா (கல்பனா சேக்கிழார்) (பிறப்பு: மே 11, 1973) தமிழில் எழுதிவரும் கட்டுரையாளர், எழுத்தாளர், பேராசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

சே. கல்பனா மே 11, 1973-ல் தஞ்சாவூரில் பிறந்தார். தமிழில் இளங்கலைப்பட்டம் பெற்றார். தமிழ் மொழியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமிழில் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றார். கல்பனா சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். சிதம்பரத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

சே. கல்பனா நாற்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். இணைய இதழ்கள், நாளிதழ்களில் தமிழ் இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் எழுதிவருகிறார். 'சங்ககாலப் புலவர்கள் இரவலர்களா?', 'கலித்தொகை - பதிப்புகள்', 'திருநாவுக்கரசர்', 'புறநாநூற்றில் கல்விச் சிந்தனை', 'சொற்பொழிஞர் அண்ணா' போன்றவை இவர் எழுதிய சில கட்டுரைகள்.

நூல் பட்டியல்

  • திருக்குறள் - பரிதியாரின் உரைத்திறன்
  • புறநானூற்றில் தமிழர் வாழ்வியல்
  • கணினியும் கன்னித்தமிழும்
  • ஐங்குறுநூற்று உருபனியற் பகுப்பாய்வு

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page