under review

செல்வராஜ் (தெருக்கூத்து)

From Tamil Wiki
செல்வராஜ்

செல்வராஜ் (வீடூர் செல்வராஜ் வாத்தியார்) (பிறப்பு: 1936) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர்களில் ஒருவர். வாத்தியார். தெருக்கூத்துக்கள், தனிக்கூத்துக்கள் பலவற்றையும் அரங்காற்றுகை செய்துள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

செல்வராஜ் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் வீடூர் கிராமத்தில் 1936-ல் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை படித்தார்.

கலை வாழ்க்கை

செல்வராஜ் எல்லப்பன் வாத்தியாரிடம் கூத்து கற்றார். பல குழுக்களிலும் திருவிழா, இறப்புச் சடங்கு, காதணி, மஞ்சள் நீராட்டு ஆகிய விழாக்களில் கூத்து ஆடியுள்ளார். வீடூர் பாரததேவி நாடக சபாவின் ஆசிரியர். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கூத்து வாத்தியாராக அனுபவம் உள்ளவர். மகாபாரதம், ராமாயணம், மாரியம்மன், ஐய்யனார் (தனிக்கூத்து), ஐயனார் அப்பன் கல்யாணம், கண்டன் கார்கோடன், சூரன் சம்சாரம், பகவதியம்மன் திருவிளையாடல் ஆகிய கூத்துக்களை பயிற்றுவித்து அரங்காற்றுகை செய்துள்ளார்.

நல்லாப்பிள்ளை பாரதம், புகழேந்திப்புலவர் பாரதம், அம்மணி அம்மாளின் கர்ணமோட்சம் ஆகிய கூத்து பிரதிகளைக் கொண்டும் அரங்காற்றுகை செய்துள்ளார். கோவர்தம், திருவடந்தை, திண்டிவனம் ஆகிய ஊர்களில் கூத்து ஆடியுள்ளார்.

அரங்காற்றிய கூத்துக்கள்

  • மகாபாரதம்
  • ராமாயணம்
  • மாரியம்மன்
  • ஐய்யனார் (தனிக்கூத்து)
  • ஐயனார் அப்பன் கல்யாணம்
  • கண்டன் கார்கோடன்
  • சூரன் சம்சாரம்
  • பகவதியம்மன் திருவிளையாடல்

உசாத்துணை

  • தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 15:31:39 IST