செட்டிகுறிச்சி ஸ்ரீ வீரபத்திர சுவாமி
From Tamil Wiki
- சுவாமி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுவாமி (பெயர் பட்டியல்)
செட்டிகுறிச்சி ஸ்ரீ வீரபத்திர சுவாமி (1812) இந்து யோகி. செட்டிக்குறிச்சி விலக்கு என்னும் இடத்தில் இவருடைய சமாதி உள்ளது.
இடம்
விருதுநகர் மாவட்டம், பந்தல்குடியிலிருந்து மதுரை செல்லும் நான்குவழி பிரதான சாலையில் அமைந்துள்ள வாழ்வாங்கி ஊரின் அடுத்து வரும் நிறுத்தம் செட்டிகுறிச்சி விலக்கு. இங்கு சாலையின் மேற்புறம் அமைந்துள்ள மகானின் சமாதி ஆலயம் இது.
வரலாறு
அருப்புக்கோட்டையில் வாழ்ந்த வீரபத்ர சுவாமி என்னும் யோகி 1812-ல் இங்கே சமாதியானதாகச் சொல்லப்படுகிறது. அவருடைய சமாதியிடத்தில் சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. வழிபாடுகள் இல்லை. விளக்கு மட்டும் போடப்படுகிறது. ஆலயம் சிறு விமானத்துடன் 1812-ல் கட்டப்பட்டுள்ளது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
25-Sep-2022, 12:28:57 IST

