under review

சுப்பிரமணிய ஐயர்

From Tamil Wiki

சுப்பிரமணிய ஐயர்(மழவை சுப்பிரமணிய பாரதியார்) (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். கீர்த்தனைகள் பல பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சுப்பிரமணிய ஐயர் மதுரைக்குக் கிழக்கே உள்ள மழவாபுரியில் சுந்தர ஐயருக்கு மகனாகப் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சுப்பிரமணிய ஐயர் பரஞ்சோதித் தம்பிரான் புராணமாய் இயற்றிய சிவனது திருவிளையாடல் அறுபத்தி நான்கையும் 'திருவிளையாடற் கீர்த்தனை' என்ற பெயரில் பாடினர். இந்நூலில் வெண்பா(5), கலித்துறை(4), கொச்சகம்(6), விருத்தம் (504), பதம்(377) என மொத்தம் 811 கவிதைகள் உள்ளன. இந்த திருவிளையாடற் கீர்த்தனைகளை வியந்து விசாகப் பெருமாளையர், தாண்டவராய சுவாமிகள் ஆகியோர் சாற்றுகவி எழுதினர். 'திருவிளையாடற் கீர்த்தனை' மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அரங்கேறியது.

பாடல் நடை

வெள்ளிவெற்புஞ் சடைமுடியுங் கொன்றைமா
லையும்பாம்பும் விடையு நீக்கிக்
கொள்ளுமது ராபுரியு மணிமுடியுந்
தொடைவேம்புங் கோலப் பூணுந்
துள்ளுமீ னக்கொடியு நாட்டமீ
னக்கொடியுந் தோய்ந்து மேலோர்
விள்ளுமுல காண்டசுந்த ரேசாநின்
கவிக்குநின்ருள் வேண்டி னேனே.

நூல் பட்டியல்

  • திருவிளையாடற் கீர்த்தனை
  • இலக்குமித்தலப்புராணம்
  • மயில்மலைப் பிள்ளைத்தமிழ்
  • கூடல் திருவிளையாடல் யமகவந்தாதி
  • திருவிளையாடல் சுந்தரமாலை சந்தவிருத்தம்
  • திருமெய்யம் ஈசுவரன் கோயில் தலபுராணக் கீர்த்தனை
  • திருமெய்யம் விஷ்ணு கோயில் தலபுராணக் கீர்த்தனை

உசாத்துணை


✅Finalised Page