சுந்தர சுகன்
சுந்தர சுகன் (1987 - 2015) (சுகன், சுந்தரசுகன், சௌந்தர சுகன்) இலக்கிய மாத இதழ். தஞ்சையில் இருந்து வெளிவந்தது. சுகன் இதன் ஆசிரியராக இருந்து நடத்தினார்.
தொடக்கம்
சுகன் என்னும் கையெழுத்து இதழாக எழுத்தாளர் சுகன் இவ்விதழை ஜூன் 1987 முதல் வெளியிட்டார். நகலச்சு, ரோனியோ, அச்சு இதழ் என பல வடிவங்களில் தொடர்ந்து 28 ஆண்டுகள் ஒரு மாதம்கூட இடைவெளியின்றி 333 இதழ்கள் வெளிவந்தது. நடுவே பதிவுச் சிக்கல்களால் இதழின் பெயர் 'சுந்தர சுகன்', 'செளந்தர சுகன்' என்றெல்லாம் மாற்றம் பெற்றது.
உள்ளடக்கம்
சுகன் இதழில் அரசியல் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் வெளியிடப்பட்டன. வா.மு. கோமு இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியிருக்கிறார். கீரனூர் ஜாகீர்ராஜா, ஷாராஜ் உள்ளிட்ட தஞ்சை படைப்பாளிகள் இதில் தொடர்ந்து எழுதினர்.
நிறுத்தம்
2015-ல் சுகன் மறைந்தபோது இதழ் நின்றுவிட்டது.
இடம்
இளம் படைப்பாளிகளை அறிமுகம் செய்யும் இதழாக இவ்விதழ் வெளிவந்தது.
உசாத்துணை
- சுகன் அஞ்சலி முருகேஷ் தி ஹிந்து
- சுகன் நினைவுக்கட்டுரை ஜெயதேவன்
- சிற்றிதழ் அறிமுகம்: சௌந்தர சுகன், திண்ணை
- 'சிற்றிதழும் சுகனும் - ஒரு நினைவலை', கிருஷ்.ராமதாஸ், ஆசிரியர் & வெளியீட்டாளர், சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jun-2025, 22:30:22 IST
