under review

சிக்கில் முத்துக்குமாரப் பிள்ளை

From Tamil Wiki

சிக்கில் முத்துக்குமாரப் பிள்ளை (1876 - 1933) ஒரு தவில் கலைஞர்.

இளமை, கல்வி

முத்துக்குமாரப் பிள்ளை சிக்கில் என்ற ஊரில் 1876-ம் ஆண்டில் வள்ளியம்மாளுக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை பெயர் தெரியவில்லை.

தனிவாழ்க்கை

முத்துக்குமாரப் பிள்ளைக்கு கலியப்பெருமாள் என்ற சகோதரர் இருந்தார்.

திருவாரூர் கிருஷ்ணசாமி பிள்ளை என்ற நாதஸ்வரக் கலைஞரின் மகளான வேதவல்லி என்பவரை முத்துக்குமாரப் பிள்ளை மணந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இசைப்பணி

முத்துக்குமாரப் பிள்ளை திருக்கண்ணமங்கை நடேச பிள்ளைக்கு மட்டுமே தவில் வாசித்து வந்தார். பிற நாதஸ்வரக் கலைஞர்களுக்கு தவில் வாசிக்க வரும் அழைப்பை முத்துக்குமாரப் பிள்ளை ஏற்கவில்லை.

மாணவர்கள்

சிக்கில் முத்துக்குமாரப் பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

  • நாகப்பட்டணம் கோவிந்தசாமிப் பிள்ளை
  • அம்மையப்பன்
  • தக்ஷிணாமூர்த்தி பிள்ளை

மறைவு

சிக்கில் முத்துக்குமாரப் பிள்ளை 1933-ம் ஆண்டில் காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Mar-2023, 20:31:26 IST