under review

சாந்தலிங்க கவிராயர்

From Tamil Wiki
கவிராயர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கவிராயர் (பெயர் பட்டியல்)

சாந்தலிங்க கவிராயர் (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சாந்தலிங்க கவிராயர் சோழ நாட்டில் தண்டலைச் சேரி என்னும் ஊரில் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சாந்தலிங்க கவிராயர் தண்டலையார் சதகத்தை இயற்றினார். காப்பும், அவையடக்கமும் அடங்கிய பாடல்கள் விருத்தங்களில் பழமொழிகள் வைத்துப் பாடிய காரணத்தால் 'பழமொழி விளக்கம்' என்றும் அழைக்கப்பட்டது. தண்டலையார் சதகத்தில் நூற்றிப்பன்னிரெண்டு பாடல்கள் உள்ளன. தண்டலையார் சதகம் படிக்காசுத் தம்பிரானால் இயற்றப்பட்டதாக சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

பாடல் நடை

  • தண்டலையார் சதகம்

சங்கையறப் படித்தாலுங் கேட்டாலும் பிறர்க்குறுதி
தனைச்சொற் றலும்
அங்கணுல கினிற்சிறியோர் தாமடக்கி நடந்துகதி
யடைய மாட்டார்
திங்களனி சடையாரே தண்டலையா ரேசொன்னேன்
சிறிது காலங்
கங்கையிலே படிந்தாலும் பேய்ச்சுரைக்காய் நல்லசுரைக்
காயா காதே.

நூல் பட்டியல்

  • தண்டலையார் சதகம்

உசாத்துணை

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Oct-2023, 07:06:06 IST