under review

சாத்தந்தை கூட்டம்

From Tamil Wiki

சாத்தந்தைக் கூட்டம் (சாத்தந்தைக் குலம்,சாதந்தை குலம்) கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியின் உட்பிரிவான அறுபது கூட்டங்களில் ஒன்று. சாத்தன் தந்தை என்று சொற்பொருள். சாத்தன் எனும் குடிமூதாதை பெயரில் இருந்து வந்த பெயராக இருக்கலாம். தந்தை என்பது குடித்தலைவனையும் குறிக்கும். ஒரு வணிகச் சாத்தின் தலைவனில் இருந்து உருவான பெயரும் ஆகக்கூடும்.

(பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்)

பெயர்

வி.இராமமூர்த்தி சாதந்தை என்ற பெயரைச் 'சாத்தந்தை' எனக் கொண்டு சாத்தன் குலமும் ஆந்தை குலமும் சேர்ந்து சாத்தந்தை குலம் ஆயிற்று என்று கூறுகிறார்.எந்த இடத்திலும் 'சாத்தந்தை' என்று இக்குலம் குறிக்கப்படவில்லை இரா.இரவிகுமார் , வி.இராமமூர்த்தி கூறுவதை ஏற்றுக்கொண்டு ஆந்தை கூட்டத்தொடு தொடர்புடைய சாத்தந்தை குலத்தினர் 'ஆந்தைப் பாடி' நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகிறார்.'சாத்து' என்பது வணிகக் குழுவைக் குறிக்கும் சொல். சாத்தின் தலைவன் என்ற பெயர் வந்திருக்கலாம். வணிகம் செய்வதில் ஈடுபட்டு வேளாளர்கள் சாத்தந்தை குலத்தார் என அழைக்கப்பட்டிருக்களாம் என்றும் கருதுகின்றனர்.சாத்தந்தை என்பது பழமையான பெயர்.கொடுமணல் அகழாய்விலும்,இடைகாலக் கல்வெட்டுகளிலும் 'சாத்தந்தை' என்ற பெயர் பல இடங்களில் பயின்று வந்துள்ளது.

அந்துவன் சாத்தன் என்ற அரசனைப் பற்றி புறநாநூறு - 71 கூறுகிறது. அந்துவன் என்னும் குலம் ஏற்கனவே கொங்கு கவுண்டர்களில் உள்ளது. இப்பெயர்கள் சங்ககாலம் முதல் இருந்தவை என ஊகிக்கிறார்கள்.

நூல்குறிப்புகள்

கொங்கு மண்டல சதகம்த்தின்படி சாத்தந்தையார் முதற்காணி அத்திபநல்லூர். அலகுமலை குறவஞ்சி பொங்கலூர் நாட்டின் காணியாள்ர்களில் ஒருவர் சாத்தந்தை குலத்தினர் என்று கூறுகிறது. தி. அ. முத்துசாமிக் கோனார் கொங்குநாடு என்னும் நூலில் (1993) மேள்கரைப் பூந்துரை நாட்டில் வீரகநல்லூர், ஓடாநிலை ஆகிய ஊர்களைச் சாத்தந்தை குலத்தாரின் காணியூர்கள் என்பார்.

சில தனிப்பாடல்களில்,

"உகாயனூர் வாய்த்த சாத்தந்தை"

"ஆத்திப நல்லூர் அதிபர் சாத்தந்தை"

"திசைக்குமது தென்னாகம் வெள்ளோடை அல்லாளம்

நிருபன் சாத்தந்தை குலனே"

என்று கூறப்பட்டுள்ளது

தொன்மங்கள்

சாத்தந்தையம்மன் இவர்களின் குல தெய்வம் . சோழன் சார்பில் சரவணமகீபன் வேட்டுவர்களை வென்று அள்ளாளப்புரி, உகையனூர் ஆகியவர்களைக் கைப்பற்றினான். சோழன் ."உலகுடைய மன்றாடிப் " பட்டம் அளித்தான் . வீரராஜேந்திரன் காலத்தில் பிள்ளான் தேவன் என்ற சாத்தந்தைக் குலத்தானுக்கு கொடுகூர் ஆட்சியை அளித்தான் .கொடுங்கூர். கொடுமுடி. சாத்தந்தை குடியினர் பூந்துறை வேட்டுவர்களை வென்றனர்.

சாத்தந்தையர். உலகபுரம், கனகபுரம் , தேவனாம்பாளையத்தையும் பெற்றனர் .

காலிங்கராயன்

சாத்தந்தைக் குலத்தில் வந்த கந்தான் காலிங்கராயன் ஊத்துக்குளி பாளையப்பாட்டின் ஆட்சியாளராக இருந்தார். வெள்ளோட்டில் ஆட்சி நிறுவிய காலிங்கராயன் காலிங்கராயன் வாய்க்காலை அமைத்து பூந்துறை நாட்டை நீர்வளம் மிக்கதாக்கினான். அது இன்றும் காலிங்கராயன் வாய்க்கால் என்றே அழைக்கப்படுகிறது.

கம்பரை பேணுதல்

வெள்ளோடு முத்தையக் கவுண்டர் சந்திர சூரியர் உள்ளவரை சாத்தந்தைக் குலத்தவர் கம்பரின் தமிழுக்கு அடிமை என்று சாசனம் அளித்ததாக குலவரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. கொங்குமண்டல சதகம் நூலில் வாலசுந்தர கவிராயர் திருவெண்ணை நல்லூர் சடையப்ப வள்ளல் சாத்தந்தை குலத்தவர் என்று குறிப்பிடுகிறார்.

சாத்தந்தை கோத்திரன் பண்ணை குலோத்திரன் தமிழ்ச்சடையன்

கோத்திரம் நாற்பத்தெண் ணாயிரம் என்னும் குலம்விளங்க

ஆத்திப நல்லூர் கலியுகம் ஆயிரம் இம்பத்தொன்றில்

வாழ்த்துவர் கங்கையின் வந்கிசத் தோர்கொங்கு மண்டலமே

சதகம் பாடவைத்தல்

வாலசுந்தரக் கவிராயருக்குப் பொருள் கொடுத்துக் கொங்கு மண்டல சதகம் பாடுமாறு கூறியது சாத்தந்தைகுல வள்ளல்தான்.இதனை நூலாசிரியர்

"இடுக்குவர் பிள்ளை தன்னை இறங்கினும் இருக்கார்என்று

வடித்தமிழ் நூலின் ஆசான் வாலசுந் தரம்யான் சொன்னேன்

படிக்கவே பொருட்சாத் தந்தை பண்ணைகோன் வெண்ணெய் நல்லூர்

கொடுத்திடும் இரணம் வாரிக் கொங்குசெய் சதகம் தானே"

என்ற கொங்கு மண்டல சதகப் பாடலில் குறிப்பிடுகிறார்.

வழக்கங்கள்

சாதந்தை குலத்தாரில் சிலர் பொங்கல் வைப்பதில்லை. சிலர் விசேடங்களுக்குப் பந்தல் போடுவதில்லை

ஊர்கள்

வெள்ளோடு , நாகம்பள்ளி , கூகலூர், விஜயமங்கலம் , குன்றத்தூர் , அல்லலாபுரம், கூடலூர், உகையனூர், காங்கேயம், இலவமலை , பாலத்தொழு, கருவேலம்பாடி, காரைத்தொழு, அத்தாணி, அல்லிபுரம் , வல்லிபுரம் ஆகியன சாத்தந்தைக் குலத்தார் காணியூர்களாகும்.

உசாத்துணை

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:38:21 IST