under review

சாதனா சகாதேவன்

From Tamil Wiki
சாதனா சகாதேவன்

சாதனா சகாதேவன் (சுஜீவன்) (பிறப்பு: டிசம்பர் 12, 1986) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

சாதனா சகாதேவன் டிசம்பர் 12, 1986 அன்று இலங்கை, யாழ் மாவட்டத்திலுள்ள புங்குடுதீவு கிராமத்தில் தம்பியையா சகாதேவன், மேனகை இணையருக்குப் பிறந்தார். இயற்பெயர் சுஜீவன். கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் பொதுத்தராதரத்தில் கலைப்பிரிவு வரை பயின்றார். ஜெர்மனியில் தனியார் தொழிற்சாலையில் இயந்திர துப்பரவு பணியாளராக உள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

முதல் தொகுப்பு ’தொலைந்து போன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்’ 2018-ல் ஸீரோ டிகிரி பதிப்பகம் மூலம் வெளியானது. சாரு நிவேதிதா, ஷோபா சக்தி, எஸ். சம்பத், தஸ்தாயெவ்ஸ்கி, ஆன்டன் செகாவ், லியோ டாஸ்டாய் ஆகியோரைத் தன் ஆதர்ச எழுத்தாளர்களாகக் கூறுகிறார். "மனித வாழ்வின் புரிந்து கொள்ள முடியாத சிடுக்குகளை மகத்தான கதைசொல்லல் மூலம் கலையாக்குகிறார்" என சாரு நிவேதிதா கூறுகிறார்.

தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்

நூல்கள்

சிறுகதைகள் தொகுப்பு
  • தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்

வெளி இணைப்புகள்


✅Finalised Page