under review

சமீஹா ஸபீர்

From Tamil Wiki

சமீஹா ஸபீர் (20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் ஊடகவியலாளர், கட்டுரையாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

சமீஹா ஸபீர் இலங்கை ஏறாவூரில் நூர் முகம்மது, மரியம் பீபி இணையருக்குப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை ஏறாவூர் அறபா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை அல்முனிரா மகளிர் கல்லூரியிலும் கற்றார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அலுவலக முகாமைத்துவத்தில் பட்டம் பெற்றார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றார்.

ஊடக வாழ்க்கை

சமீஹா ஸபீர் 2000-ல் சக்தி தொலைக்காட்சியில் பயிற்சியாளராக இணைந்தார். 2010-ல் நிகழ்ச்சி முகாமையாளராக நியமனம் பெற்றார். 2000 முதல் 2014 வரையான காலப்பகுதியில் இசைமேடை, பூஞ்சோலை, றமழான் மாத சிறப்பு நிகழ்ச்சிகள் சகர் போன்ற நிகழ்ச்சிகளை தயாரித்து நெறிப்படுத்தினார். UTV யில் சிரேஷ்ட நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

சமீஹா ஸபீரின் ஆக்கங்கள் வீரகேசரி, நவமணி சுடர்ஒளி போன்ற நாளிதழ்களில் வெளிவந்தன. கட்டுரைகள் எழுதினார்.

உசாத்துணை


✅Finalised Page