சந்திர ஒளி
From Tamil Wiki
- ஒளி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஒளி (பெயர் பட்டியல்)
- சந்திரன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சந்திரன் (பெயர் பட்டியல்)
To read the article in English: Chandira Oli.
சந்திர ஒளி (1949) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். சாமி என்பவரால் நடத்தப்பட்ட மாதமிருமுறை இதழ். (பார்க்க சிறுவர் இதழ்கள்)
உள்ளடக்கம்
சென்னையில் இருந்து தமிழ்நாட்டுத் தம்பி தங்கைகளின் நல்லொழுக்கத்தை வளர்க்க வேண்டும் என்னும் திட்டத்துடன் 1949 முதல் வெளிவந்தது. சிறுகதை, கவிதை, தொடர்கதை, கேள்வி பதில், குறிப்பு, பொன்மொழிகள், போட்டிகள் என சிறுவர்களை ஈர்க்கும் வகையில் வெளியிட்டுள்ளது. கசகசா எழுதிய தங்கச் சுரங்கம் தொடர்கதை வந்துள்ளது.
உசாத்துணை
- தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் - https://www.thamizham.net/
- சந்திர ஒளி - பழைய இதழ்கள் | தமிழம் வலை (thamizham.net)
- குழந்தை இலக்கியத்தில் இதழ்கள் (keetru.com)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:33:16 IST