under review

கோபாலகிருஷ்ணையர்

From Tamil Wiki
கோபாலகிருஷ்ணன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கோபாலகிருஷ்ணன் (பெயர் பட்டியல்)

கோபாலகிருஷ்ணையர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். நந்தனார் சரித்திரம் பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

கோபாலகிருஷ்ணையர் சோழநாட்டில் சீர்காழித்தாலுகாவில் ஆனைதாண்டபுரத்தில் வடபிராமணக் குலத்தில் பிறந்தார். சங்கீத வித்துவான். இலக்கண ஆராய்ச்சியில் ஈடுபாடு கொண்டவர்.

இலக்கிய வாழ்க்கை

சிவதொண்டர்களில் ஒருவரான நந்தனாரின் சரித்திரத்தைப் பாடினார் அதிசிங்கார வசனமாகவும், சிந்து, தரு, விருத்தம், நொண்டி, அகவல், ஆகிய பாக்களாகப் பாடினார்.

பாடல் நடை

சிற்பிகள் கான்போர் சிந்தையு முவக்கச்
செப்புநல் லின்புறத் தீட்டும்
விற்பனங் கண்ட வறிவிலா னெழுதும்
விதமென முத்தமி ழென்னுஞ்
சொற்புகழ் கல்வித் துறையெலாந் தெரிந்த
தூயநற் புலவர்முன் கருதிப்
பொற்புற விசைக்குங் கீர்த்தன மிதனைப்
புவிமிசை மிதிப்பர்க ளம்மா

நூல்பட்டியல்

  • நந்தனார் சரித்திரம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Aug-2023, 11:30:32 IST