under review

கைக்குறிகள் (பரதநாட்டியம்)

From Tamil Wiki
Bharatham kann1.jpg

பரத நாட்டியத்தில் கண்குறிகளும், கைக்குறிகளும் முக்கிய பங்கை வகிப்பவை. கண்ணிலும், கையிலும் தான் நாட்டிய சூட்சமம் உள்ளது.

கைக்குறியில் அழகு பெறக் காட்டுங்கை எழிற்கை, தொழில்பெறக் காட்டுவது தொழிற்கை. எழிற் கையும் தொழிற்கையும் சத்வ ராஜஸ தாமஸ குணங்களைக் காட்டும் அகக்கூத்திற்குரியன. பிண்டியும், பிணையலும் புறக் கூத்திற்கு உரியன. ஒற்றைக் கைக்கும் குவித்தகைக்கும் கூடை என்பர்.

கைக்குறிகள்

அகக்கூத்தில் ஒற்றையில் செய்யும் கைத்தொழிலும், இரட்டையில் செய்யும் கைத்தொழிலும் முரண் படாதிருக்க வேண்டும். கைக்குறிகள் ஒற்றைக்கை (அசம்யுக்தம்), பிணைக்கை (ஸம்யுக்தம்) என்று இரண்டு வகையாகும். இவற்றை நேரே ஆசிரியரிடம் பயின்றே அறிய முடியும். ஆதலால் பெயர் மட்டுமே குறிப்பிட முடியும்.

ஒற்றைக் கைக்குறிகள்
  1. பதாகம், கொடி
  2. திரிபதாகம், மூன்று விரல் நீட்டல்
  3. கர்த்திரி முகம், கத்தரிக்கோல் முகம்
  4. அர்த்த சந்திரம், பாதிமதி
  5. அராளம், கோணல்
  6. சுகதுண்டம், கிளிமூக்கு
  7. முஷ்டி
  8. சிகரம்
  9. கபித்தம், விளாம்பழம்
  10. கடகாமுகம், நண்டுமூஞ்சி
  11. ஸூசீயாஸ்யம், ஊசிமுகம்
  12. பத்மகோசம்
  13. ஸர்ப்பசிரம்
  14. ம்ருக சிரம், மான் தலை
  15. காங்கூலம் அல்லது லாங்கூலம், பூக்கொய்தல்
  16. அலபத்மம், அசையும் தாமரை
  17. சதுரம், நால்விரல்
  18. பிரமரம், தேனீ
  19. ஹம்ஸாஸ்யம், அன்னமுகம்
  20. ஹம்ஸபஷம்
  21. மயூரம், மயில்
  22. முகுளம், மொட்டு
  23. தாம்ரசூடம், கோழிக் கொண்டை
  24. சந்த்ரகலா
  25. சிம்ஹசிரம்
  26. ஸந்தாம்சம், இடுக்கி
  27. ஊர்ணநாபம், எட்டுக் கால் பூச்சி
  28. திரிசூலம்
பிணைக்கை குறிகள்
  1. அஞ்சலி
  2. கபோதம் - கர்கடம்
  3. ஸ்வஸ்திகம் - கடகாவர்த்தமானம்
  4. நிஷாதம்
  5. டோலம்
  6. புஷ்பபுடம்
  7. மகரம்
  8. கஜதந்தம்
  9. வர்த்தமானம்
  10. அவாஹித்தம்
  11. கர்த்தரி ஸ்வதிஸ்கம்
  12. சகடம்
  13. சங்கம்
  14. சக்ரம்
  15. ஸம்புடம்
  16. பாசம்
  17. கீலகம்
  18. மத்ஸ்யம்
  19. வராஹம்
  20. கூர்மம்
  21. கருடம்
  22. நாகபந்தம்
  23. கட்வா
  24. பேரண்டம்
  25. அலஹித்தம்

பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, பார்வதி, லஷ்மி, முருகன், மன்மதன், இந்திரன், அக்னி, வாயு, யமன், வருணன், குபேரன் முதலிய தெய்வங்களையும், தசாவதாரங்களையும், அரக்கரையும், நான்கு வர்ணங்களையும், நவக் கிரகங்களையும் காட்டும் குறிகளும் உண்டு.

கருத்திற்கொண்ட பொருளைக் கைக்குறியாற் காட்டல் பிண்டி எனப்படுகிறது. பிண்டி பந்தத்தால் தெய்வங்களைக் குறிக்கலாம், உதாரணம் - சிவலிங்கம். நடனத்தில் தெய்வத்தைக் குறிக்கும் அங்கராகம், கரணம் இதற்கும் பிண்டியெனப்பெயர். பிண்டியும், பிணையலும் சேர்ந்து எத்தகைய தெய்வப் பொருளையும் விளக்கும். அதே போல் பல வகைப் புட்கள், விலங்குகள், உறவினர்களைக் கூடக் கைக்குறியால் காட்ட முடியும்.

உசாத்துணை


✅Finalised Page