under review

கண்குறிகள் (பரதநாட்டியம்)

From Tamil Wiki

To read the article in English: Eye Gestures (Bharatanatyam). ‎

Bharatham kann1.jpg

பரதநாட்டிய அபநயத்தின் தலையாயது கண்கள். கண்பார்வை, விழிப்பு, இமைத்தல், புருவ அசைவு இவற்றில் பரத சாஸ்திரத்தில் பல வகையுண்டு.

கண்குறிகள்

எட்டுப்பார்வை
பெயர் பொருள்
1 சமம் நேர்பார்வை
2 ஆலோகிதம் கூர்ந்த பார்வை
3 ஸரசி கோணப்பார்வை
4 ப்ரலோகிதம் பக்கப்பார்வை
5 நிமிளிதம் பாதி இமை திறந்த பார்வை, தியானப்பார்வை
6 உல்லோகிதம் மேற்பார்வை
7 அவலோகிதம் கீழ்ப் பார்வை
8 அனுவ்ருத்தம் மேலும் கீழும் விரைவாகப் பார்த்தல்

இவற்றைத் தவிர வேறு சில பார்வைகள் பரத சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.

பெயர் பொருள்
1 ஸ்நிக்தம் குளிர்ந்த பார்வை
2 சிருங்காரம் கருணை, அற்புதம், ஹாஸ்யம், வீரம், சினம், பயானகம், பீபத்ஸம் போன்ற நவரசங்களை வெளிப்படுத்துதல்
3 விஸ்மயம் வியப்பு
4 திருப்தி திருப்தி அல்லது நிறைவைத் தெரிவிப்பது
5 தூரப்பார்வை கண்களை சற்றே உயர்த்தி தூரத்திலுள்ளதை நோக்குதல்
6 இங்கிதம் மகிழ்வுடன் குறிப்பறிவிக்கும் பார்வை
7 மலினம்
8 விதற்கிதம் விசாலமான நேர்பார்வை
9 சாங்கிதம் தயக்கப் பார்வை
10 அபிதப்தம் உதாசினப் பார்வை
11 சூனியம் வெறுமை
12 ஹ்ருஷ்டம் களிப்பார்வை
13 உக்கரம் செஞ்சினப் பார்வை
14 விப்ராந்தம் பர பரத்த பார்வை
15 சாந்தம் அமைதிப் பார்வை
16 மிளிதம் குவிந்த பார்வை
17 சூசனம் குறிபார்வை
18 லஜ்ஜிதம் வெட்கப் பார்வை
19 முகுளம் மொட்டுப்பார்வை, இன்பக்குறி
20 குஞ்சிதம் கீழ்ப்பார்வை
21 ஆகாசப்பார்வை
22 அர்த்த முகுளம் இன்பப் பார்வை
23 அனுவிருத்தம் அவசரப் பார்வை
24 விப்லுதம் குழப்பப் பார்வை
25 விகோஸம் இமையாப் பார்வை
26 மதிரம் போதைப் பார்வை
27 ஹ்ருதயம் நிலைப்பற்ற பார்வை
28 விசோகம் விசனமற்ற பார்வை
29 திருட்டம் நடுக்கப் பார்வை
30 விஷண்ணம் துக்கப் பார்வை
31 சிராந்தம் களைத்த பார்வை
32 ஜிஹ்மம் கோணல் பார்வை
33 சலிலதம் மெல்லிய பார்வை
34 அகேகரம் சுழற்சிப் பார்வை
ஒன்பது விழிப்புகள்
1 ப்ரமண்ம் சுழற்சி
2 வலனம்
3 பாடம் தளர்த்தல்
4 கலனம் பரபரப்பு
5 ஸம்ப்ரவேசம் உட்குவிதல்
6 விவர்த்தனம் ஓரப் பார்வை
7 ஸமுத்வ்ருத்தம் மேற் பார்வை
8 நிஷ்க்ரமம் வெளிப் பார்வை
9 ப்ராக்ருதம் இயல் நோக்கு
ஒன்பது இமைப்பு
1 உன்மேஷம் திறத்தல்
2 நிமேஷம் குவித்தல்
3 ப்ரச்ரம் விரித்தல்
4 குஞ்சிதம் இலேசாகத் தாழ்த்தல்
5 சமம் நேராக நோக்குதல்
6 விவர்த்திதம் மேலுறுத்தல்
7 ஸ்புரிதம் இமைத்தல்
8 பிஹிதம் இறுக மூடல்
9 ஸவிதாடிதம் நோவுற்ற விழி
ஏழு புருவ அசைப்பு

புருவம் கண் இமை இவற்றுடன் சேர்ந்து அசைவதால் அதுவும் உணர்ச்சிகளைக் காட்டும்

1 ஸஹஜம் இயல்பு
2 பதனம் தாழ்த்தல்
3 ப்ருகுடி உயர்த்தல்
4 சதுரம் விசாலித்தல்
5 உத்ஷிப்தம் உயர்த்தல்
6 குஞ்சிதம் வளைத்தல்
7 இரேசிதம் ஒரு புருவத்தை அழகாக நிவத்தல்

உசாத்துணை


✅Finalised Page