குழவிக்கண் தோன்றிய காமப்பகுதி
குழவிக்கண் தோன்றிய காமப்பகுதி பாடாண் திணையின் துறைகளில் ஒன்று. குழந்தைப் பருவத்திலுள்ள மைந்தர் மீது பெண்கள் அன்பு செலுத்துதலைக் கூறும் துறை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் குழவிப்பருவத்து மைந்தரிடம் அன்பு செலுத்தும் பெண்களின் இயல்பைக் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
இளமைந்தர் நலம்வேட்ட
வளமங்கையர் வகையுரைத்தன்று(கொளு.50)
வெண்பா
வரிப்பந்து கொண்டு ஒளித்தாய் வாள்வேந்தன் மைந்தா
அரிக்கண் அஞ்சி அலற - எரிக்கதிர் வேல்
செங்கோலன் நும் கோச்சினக் களிற்றின் மேல் வரினும்
எம் கோலம் தீண்டல் இனி (238)
சிறுவனே! இச்சிறுமி வருந்த அவள் பந்தினை ஒளித்துவைத்தாய். உன் தந்தையே வந்து பரிந்துரைத்தாலும் என்னை அணைத்துக்கொள்ள விடேன்' என்று தாய் கூறுவதை வெண்பா காட்டுகிறது. சிறுவனது குறும்பு விளையாட்டைக் குறைப்பதற்காகக் கூறுதல் போன்று இது அமைந்துள்ளது.
உசாத்துணை
பாடாண் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Mar-2025, 18:24:04 IST