under review

குருமலை சுந்தரம் பிள்ளை

From Tamil Wiki
சுந்தரம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுந்தரம் (பெயர் பட்டியல்)

To read the article in English: Kurumalai Sundaram Pillai. ‎

ஜி.சுப்ரமணிய அய்யர் சரிதம் மறுபதிப்பு

ஒட்டப்பிடாரம் குருமலை சுந்தரம்பிள்ளை வழக்கறிஞர். சுதேசமித்திரன் இதழில் பாரதியாருடன் இணைந்து துணையாசிரியராகப் பணியாற்றியவர். தமிழின் தொடக்ககால நாவல்களில் ஒன்றாகிய பொற்றொடியை எழுதியவர். சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி.சுப்ரமணிய அய்யரின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.

சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி.சுப்ரமணிய அய்யரின் வாழ்க்கை வரலாறு 1907-ல் சுதேசமித்திரன் வெள்ளிவிழாவின்போது வெளியிடப்பட்டது. இந்நூலை 2018-ல் செ.ஜெயவீரதேவன் மறுபதிப்பாக கொண்டுவந்திருக்கிறார்.

நூல்கள்

  • பொற்றொடி, 1911
  • ஜி.சுப்ரமணிய அய்யர் சரித்திரம், 1907



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:32:36 IST