under review

காந்தி நினைவுத்தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
காந்தி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: காந்தி (பெயர் பட்டியல்)
பள்ளிச்சின்னம்

காந்தி நினைவு தமிழ்ப்பள்ளி மலேசியாவின் பேராக் மாநிலத்தின் கோலகங்சார் பகுதியில் அமைந்திருக்கும் தமிழ்ப்பள்ளி. காந்தி நினைவுத் தமிழ்ப்பள்ளியின் பதிவெண் ABD4109.

பள்ளி வரலாறு

பேராக் மாநிலத்தின் அரசத் தலைநகரான கோலகங்சார் வட்டாரத்தில் வசிக்கும் இந்தியர்களின் பிள்ளைகள் அடிப்படைக் கல்வி பெறுவதற்காக 1931-ம் ஆண்டு காந்தி ஞாபகார்த்த தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டது. தனியாருக்குச் சொந்தமான நிலப்பகுதியில் சிறிய கட்டிடத்தில் 25 மாணவர்களுடன் காந்தி ஞாபகார்த்தத் தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டது.

வளர்ச்சி

பள்ளி வளாகம்

கோலகங்சார் வட்டார வணிகர் சிவலிங்கம் செட்டியார் வழங்கிய நிலத்தில் தமிழர் பாடசாலை எனும் பெயரில் பள்ளி இயங்கியது. பள்ளியின் அடிக்கல் நாட்டும் விழாவுக்கு வருகை தந்த மலாயா இந்தியர் காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவரும் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் மலாயாவுக்கான முதல் இந்திய தூதராக நியமிக்கப்பட்டவருமான ஜான் திவி பள்ளிக்கு காந்தி ஞாபகார்த்த பாடசாலை எனும் பெயரைச் சூட்டினார். கோலகங்சார் பகுதியிலிருந்த சமரச கலாசாலை எனும் பள்ளியும் இப்பள்ளியுடன் இணைக்கப்பட்ட பிறகே காந்தி நினைவு தமிழ்ப்பள்ளி எனும் பெயரைப் பள்ளி பெற்றது. 1950-ம் ஆண்டு பேராக் மாநில இளவரசரால் பள்ளியின் புதியக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

தற்காலம்

பள்ளிக் கட்டிடம்

2023-ம் ஆண்டில் கோலகங்சார் காந்தி நினைவுத் தமிழ்ப்பள்ளி 98 மாணவர்களையும் 17 ஆசிரியர்களையும் கொண்டு இயங்கியது.

பள்ளிப் பாடல்

அரச நகரில் வீற்றிருக்கும் காந்தி நினைவு பள்ளியாம்
அறிவு ஒழுக்கம் கல்வியூட்டும் அருமைத் தமிழ்ப்பள்ளியாம்
வாழ்க வாழ்க வாழ்கவே

கன்னித் தமிழ் மலாயும் ஆங்கிலத்தையும்
கருதி கற்று சிறந்து வாழ கல்வியூட்டும் பள்ளியாம்
அன்னை தந்தை குருவைப் பேணி கல்வி பயில்வோம்
அரசு மகிழ என்றும் வாழ்ந்து காட்டுவோம்

மாந்தரிலே நேர்மை தூய்மை என்றும் நிலவ
மாணவராய் பணிந்து கற்று ஆய்ந்து ஒழுக
தேச நெறி ஐந்தினையும் பேணி வளர்ப்போம்
தேச பக்தி எழுச்சி பெற்று முன்னேறுவோம்

பள்ளி முகவரி

Sekolah Jenis Kebangsaan (T) Gandhi Memorial
14 Jalan Dato Sagor
33000, Kuala Kangsar
Negeri Perak, Malaysia

உசாத்துணை

பள்ளி மேலாண்மை வழிகாட்டி, 2023


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2024, 18:45:57 IST