காண்டல் வலித்தல்(கைக்கிளை)
காண்டல் வலித்தல் புறப்பொருளில் கைக்கிளைத் திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. காதல் கொண்ட பெண் தலைவனை மீண்டும் காண முடிவு செய்தலைக் கூறும் துறை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் காமத்தால் கைவளையல்கள் கழல்வதால் மலைநாட்டுத் தலைவனைத் தலைவி மீண்டும் காணவிரும்புதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
மைவரை நாடனை மடந்தை பின்னரும்
கைவளை சோர காண்டல் வலித்தன்று(கொளு 15.6 )
வெண்பா
வேட்டவை எய்தி விழைவு ஒழிதல் பொய்போலும்
மீட்டும் மிடைமணிப் புணானைக் - காட்டென்று
மாமை பொன்நிறம் பசப்ப
தூமலர் நெடும்கண் துயில் துறந்தனவே (299)
பொருள்: என் கண்கள் உறக்கத்தை இழந்தன. திரும்பவும் அந்தத் தலைவனைக் காட்டுக என்று சொல்லி என்மேனி பசந்துவிட்டது. விரும்பியதைக் கண்டால் ஆசை தீரும் என்பது பொய் போலும்.
உசாத்துணை
கைக்கிளைத் திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jul-2025, 18:47:05 IST