காண்டல்(கைக்கிளை)
காண்டல் புறப்பொருளில் வரும் கைக்கிளைத் திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. காண்டல்-காண்பது. பெண்ணொருத்தி தலைவனைக் கண்டு காதல் கொள்வதைக் கூறுவது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் தேன் நிறைந்த பூமாலை அணிந்த காளையை, அழகிய நெற்றியையும் மூங்கில் தோள்களையும் உடைய பெண் கண்டு காதல் ஏக்கம் கொள்ளல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
தேம்பாய் தெரியல் விடலையைத் திருநுதல்
காம்புஏர் தோளி கண்டு சேர்ந்தன்று(கொளு 15.1)
வெண்பா
கடைநின்று காமம் நலியக் கலங்கி
இடைநின்ற ஊரலர் தூற்றப் - புடைநின்ற
என்கண்டிலன் அந்நெடுந்தகை
தன்கண்டன் என் யான் கண்ட ஆறே (294)
பொருள்: என் ஆசை என்னை நெருக்க அவனிடம் மயங்கியது கண்டு ஊர் அலர்தூற்றுகிறது. அவன் என்னைக் காணவில்லை. அவனையே பார்த்தபடி இருக்கிறேன் நான்.
உசாத்துணை
கைக்கிளைத் திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jul-2025, 18:47:42 IST