under review

காசிப் பாண்டியன்

From Tamil Wiki
பாண்டியன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாண்டியன் (பெயர் பட்டியல்)

காசிப் பாண்டியன் (பொ.யு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) எட்டயபுரம் ஜமீன்தார்களில் ஒருவர். கலைப் புரவலர்.

வாழ்க்கைக் குறிப்பு

காசிப் பாண்டியன் எட்டயபுரம் ஜமீன்தார்களில் ஒருவர். சித்திரக்கலை அறிந்தவர். புகைப்படக்கலை நிபுணர்.

கலைப் பங்களிப்பு

கலைஞர்களை ஆதரிப்பதில் காசிப் பாண்டியன் குறிப்பிடத்தகுந்தவர். காசிப் பாண்டியனின் அரண்மனை ஒரு காட்சி சாலையாக இருந்தது. இசை, நாடகக் கலைஞர்களுக்கு ஆதரவளித்தார்.

மதிப்பீடு

"இசைக்கலைஞர்களுக்கும், நாடகக் கலைஞர்களுக்கும் பரிசுப் பொருட்களை வாரி வாரி வழங்கிய பெரு வள்ளல் என இவரைக் கூறலாம். இவர் தந்த பரிசுகளும், காட்டிய ஆதரவும், எங்கள் நாடக வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த இடம் பெறக்கூடியவை" என டி.கே. ஷண்முகம் காசிப் பாண்டியன் பற்றி 'எனது நாடக வாழ்க்கை' என்ற நூலில் குறிப்பிட்டார்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Aug-2024, 19:41:39 IST