under review

கழல் நிலை

From Tamil Wiki

கழல் நிலை பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று.போருக்காகக் கழல் சூடும் நிலையுடையவனின் வீரத்தைக் கூறும் துறை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வீரர்கள் மடியும் கடும் போரில் கலந்து கொள்வதற்காக அரசன் ஒருவன் கழல் அணிந்த நிலையைப் புகழ்வது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

அடுமுரண் அகற்றும் ஆள் உகு ஞாட்பில்
கடுமுரண் வயவன் கழல் புனைந்தன்று(கொளு 10.7)

வெண்பா

வாள் அமரின் முன்விலக்கி வான்படர்வார் யார்கொலோ
கேளார் நீக்கிய கிண்கிணிக்கால் - காளை
கலம் கழல் வாயில் கடுத்தீற்றி அற்றால்
பொலம் கழல் கால் மேல் புனைவு (246)

பொருள்: 'சில ஆண்டுகளுக்கு முன்னர்க் கிண்கிணி அணிந்த கால்களில் இவ்வரசன் வீரக்கழலைக் கட்டிக் கொண்ட செய்தி, பகைவர்க்கு அழிவைத் தருவது; இவனை எதிர்ப்பவர் வீர சுவர்க்கம் புகுதல் உறுதி'

உசாத்துணை

பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Mar-2025, 17:09:44 IST