under review

களிப்பொருபது

From Tamil Wiki

களிப்பொருபது (12-ம் நூற்றாண்டு) செங்குந்தர்களது பெருமையைக் கூறும் நூல். இந்நூலில் பத்துப் பாடல்கள் இடம்பெற்றன. இந்நூலைத் தொகுத்தவர் குலோத்துங்க சோழன்.

நூல் அமைப்பு

களிப்பொருபது, சிரச்சிங்காதனமிட்ட செங்குந்த விரர்களின் பெருமையையும், அவற்றை ஒட்டப் பாடிய ஒட்டக்கூத்தரது தெய்வீகச் சக்தியையும் சிறப்பித்துக் கூறுகிறது. இந்நூலில் கீழ்க்காண்போரது பாடல்கள் இடம்பெற்றன.

உள்ளடக்கம்

ஈட்டி எழுபது நூலை ஒட்டக்கூத்தர் பாட வேண்டும் என்பதற்காகத் தங்கள் தலையை அரிந்து சிரச்சிங்காதனமிட்டனர் பல செங்குந்த வீரர்கள். அவர்களது வீரத்தினைப் புகழ்ந்தும், துண்டான தலைகள் மீண்டும் இணைந்து உயிர் பெறப் பாடிய ஒட்டகூத்தரின் ஆற்றலை வியந்தும் இயற்றப்பட்ட பாடல்களைக் கொண்டது களிப்பொருபது நூல்.

பாடல்

ஔவையார்

மூவுலகை யுங்கடந்து மூதண்டப் பித்திகையை
மேவியதற் கப்பாலு மின்னியதே - பூவிலென்றும்
மங்காத நூல்வேண்டி மாண்கூத்தற் கிட்டசிரச்
சிங்கா தனத்தலைவர் சீர்.

கம்பர்

கந்தழியென் றான்றோர்கள் கண்டு நிதம்பரவும்
எந்தை முருக னிளையவராம் - சந்ததியில்
வந்துமகிழ் செங்குந்தர் வாய்மைதனை யென்சொல்கேன்
செந்திருமாற் செல்வர்களே தேர்ந்து,

சேரன்

விண்கண்ட தேவரெலாம் விற்றிருந்தா ரீங்கென்று கண்கண்ட மாமுனிவர் காட்டினார் - பண்கொண்ட கூத்தன் கவிக்குக் குவிந்ததலை யாசனத்தைப் பார்த்திடவே நன்றாய்ப் பதிந்து,


உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Sep-2024, 17:05:18 IST