கல்காண்டல்
கல்காண்டல் பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. வீர மரணம் எய்திய வீரனது உருவம் பொறித்து நடுவதற்கேற்ற கல்லைத் தேர்வது கல்காண்டல்.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல்பெரிய வெற்றியைப் பெற்ற போரில் இறந்துவிட்ட வீரனுக்கு நடுகல் செய்யக் காட்டில் கல்லைத் தேர்ந்தெடுத்தல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
ஆனா வென்றி அமரில் வீழ்ந்தோர்க்குக்
கானம் நீள்இடைக் கல் கண்டன்று (கொளு 10.8)
வெண்பா
மிகைஅணங்கு மெய்நிறீஇ மீளி மறவர்
புகை அணங்கப் பூ மாரி சிந்திப் - பகைஅணங்கும்
வீளைக் கடுங்கணையால் வேறாகி விண்படர்ந்த
காளைக்குக் கண்டு அமைந்தார் கல் (247)
பொருள்: பகைவரின் அம்பினால் உடலும், உயிரும் அறுபடும் வண்ணம் வானகம் சென்ற மறவனுக்காக புகை கண்ணை வருத்த பூமழை பொழிந்து கல்லைத் தேர்ந்தெடுத்தனர்.
உசாத்துணை
பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Apr-2025, 11:28:15 IST