under review

கமலா சுப்ரி

From Tamil Wiki
கமலா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கமலா (பெயர் பட்டியல்)
சுப்ரி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுப்ரி (பெயர் பட்டியல்)
கோவை சுப்ரி, கமலா

கமலா சுப்ரி (1911 - 1993) இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கு கொண்டவர். கோவை சுப்ரியின் மனைவி.

வாழ்க்கைக் குறிப்பு

கமலா பொள்ளாச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் ஆசிரியராக இருந்த ஏ. நடேச ஐயருக்கு 1911-ல் பிறந்தார். நவம்பர் 14, 1926-ல் கோவை சுப்ரியை மணந்தார். மகன் கிருஷ்ணமூர்த்தி.

இந்திய சுதந்திரப் போராட்டம்

கமலா பிறந்து ஆறு மாதங்களே ஆன தனது மகளுடன் 1930-ல் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். முனிசிபல் அலுவலகம் முன் சிறை தண்டனையும் பெற்றார். 1932-ல் தனது தோழிகளான பத்மாவதி ஆஷர் (திருப்பூர்), அம்புஜம் ராகவாச்சாரி, முத்துலட்சுமி (சத்தியமங்கலம்), கோவிந்தம்மாள் அய்யாமுத்து, கமலா கிருஷ்ணசாமி ஆகியோருடன் சத்தியாகிரகத்தில் பங்கேற்றதற்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

மறைவு

கமலா சுப்ரி 1993-ல் காலமானார்.

உசாத்துணை

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jul-2024, 15:33:47 IST