under review

கனவின் அரற்றல்(கைக்கிளை)

From Tamil Wiki

கனவின் அரற்றல் புறப்பொருளில் அமைந்த கைக்கிளைத் திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. காதல் கொண்ட பெண் கனவில் புலம்புதலைக் கூறும் துறை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் தலைவி அச்சம் தரும் இரவில் கனவில் கண்ட தலைவன் மறைய வாய்விட்டுப் புலம்புதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

ஒண்தொடி மடந்தை உருகெழு கங்குலில்
கண்டவன் கரப்பக் கனவில் அரற்றின்று(கொளு 15.9)

வெண்பா

அயர்வொடு நின்றேன் அரும்படர் நோய்தீர
நயம்வரும் பள்ளிமேல் நல்கிக் - கயவா
நனவிடைத் தமியேன் வைகக்
கனவில் தோன்றிக் கரத்தல் கொடிதே (302)

பொருள்: மயக்கத்தோடு நின்ற என்னுடைய நினைப்பினால் வந்த காதல் நோய் நீங்கக் கனவில் எனக்குக் காட்சிதந்து கனவிலேயே மறைந்து நான் தனியளாக இருக்கும்படி செய்தாய். இது துன்பத்தைத் தருகிறது.

உசாத்துணை

கைக்கிளைத் திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jul-2025, 18:44:46 IST