under review

கந்தசுவாமியம்

From Tamil Wiki

கந்தசுவாமியம் (பொ.யு. பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஓர் நிகண்டு நூல். சுப்பிரமணிய தேசிகர் இயற்றியது.

ஆசிரியர்

கந்தசுவாமியத்தை இயற்றியவர் சுப்பிரமணிய தேசிகர். கீழ்வேளுர் என்னும் ஊரில் பிறந்தார்.

பதிப்பு

கந்தசாமியத்தின் முதல் இரு தொகுதிகள் மட்டும் கி. பி. 1844-ல் அச்சாயின. இந்நூல் இன்று கிடைத்தற்கரியதாக உள்ளது.

நூல் அமைப்பு

கந்தசுவாமி தேசிகர் பழைய நிகண்டுச் சொற்களைத் தொகுத்து சூத்திரங்களாக இந்நூலை இயற்றியுள்ளார். முதல் தொகுதியில் 1318 சொற்களும், இரண்டாம் தொகுதியில் 1425 சொற்களும் இடம் பெற்றுள்ளன. நிகண்டு நூற்கள் அமைப்பதற்கான இருபத்து நான்கு கட்டளைகள் (விதிகள்) இந்நூலில் கூறப்பட்டுள்ளன. அவ்விதிக்களின்படியே இந்நூலும் அமைக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை

தமிழ் அகராதிக் கலை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page