under review

கணேஷ் அண்ட் கம்பெனி

From Tamil Wiki
கணேஷ் அண்ட் கம்பெனி வெளியிட்ட ஆங்கில நூல்கள்

கணேஷ் அண்ட் கம்பெனி (1910) தமிழின் தொடக்க காலப் பதிப்பகங்களுள் ஒன்று. தேசியம், விடுதலைப் போராட்டம் தொடர்பாகப் பல நூல்களை வெளியிட்டது. காந்தியின் வாழ்க்கை வரலாற்றை தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அச்சிட்டு இலவசமாக வழங்கியது. தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூற்றுக்கணக்கான நூல்களை வெளியிட்டது.

தோற்றம்

கணேஷ் அண்ட் கம்பெனி, சி.என். கிருஷ்ணசாமி அய்யரால் 1910-ல் தொடங்கப்பட்டது. 39, தம்புசெட்டித் தெரு, சென்னை என்ற முகவரியிலிருந்து செயல்பட்டது. பதிப்பாளர் சி. என். கிருஷ்ணசாமி அய்யர், வித்யா விஹாரிணி என்ற இதழின் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர்.

வெளியீடு

கணேஷ் அண்ட் கம்பெனி தேசியம், சமூகம், பொருளாதாரம், கல்வி குறித்துப் பல நூல்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டது. ஏப்ரல் 12, 1945-ல் காந்தி சென்னை வந்தபோது, காந்தி குறித்த வரலாற்றை தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பத்தாயிரம் பிரதிகள் அச்சிட்டு இலவசமாக வழங்கியது. கணேஷ் & கோ வெளியிட்ட நூல்களில், ‘இந்தியாவும் சுய ஆட்சியும்’ எனும் நூல் குறிப்பிடத் தகுந்த ஒன்று.

சகோதரி நிவேதிதா, சரோஜினி தேவி, சி.ஆர். தாஸ், ஜோசப் மாஜினி, பால் ரிச்சர்ட், சரளா தேவி, ஹெச்.எஸ்.எல். பொலாக், பாபு மோதிலால் கோஸ் உள்ளிட்ட பலரது நூல்களை கணேஷ் & கோ வெளியிட்டது.

கணேஷ் அண்ட் கம்பெனி வெளியிட்ட தமிழ் நூல்கள்

கணேஷ் அண்ட் கம்பெனி வெளியிட்ட நூல்கள்

தமிழ் நூல்கள்
  • இந்தியாவும் சுய ஆட்சியும்
  • மஹாத்மா காந்தியின் சரித்திரம்
  • இந்து தேசாபிமானிகள் சரித்திரம்
  • இந்தியாவுக்கு ஸ்வாதீனம், அதன் அவசரம்
  • திலகரின் பிரசங்கங்கள்
  • பண்டித மதன்மோகன் மாளவியாவின் பிரசங்கங்கள்
  • பிரசிடெண்டு வில்சனது பிரசங்கங்கள்
  • மாண்டேகுவின் பிரசங்கங்கள்
  • ௮. முகம்மது அலி பிரசங்கங்கள்
  • ஐசுவரிய சக்கரம்
  • ஒத்துழையாமை ஏன்?
  • ஒத்துழையாமை இதர தேசங்கள் வெற்றிபெற்ற விவரம்
  • பாரத நாட்டின் நிலைமை
  • சிலப்பதிகாரக் கதை
  • சூளாமணி வசனம்
  • தமயந்தி ஒரு புதிய தமிழ் நாடகம்
  • ஆரியக் கதைகள்
  • அஷ்டோத்தர சதநாமாவளிகள்

மற்றும் பல

ஆங்கில நூல்கள்
  • Mahatma Gandhi
  • M. K. Gandhi a study
  • India’s Claim for Home Rule
  • India for Indians
  • Indian National Builders
  • The New Japan
  • Sir Rabindranath Tagore
  • New ways in English Literature
  • The Kingdom of Youth
  • The Garland of Life
  • The Aryan ideal
  • Select Essays of Sister Nivedita
  • Lord Chelmsford s viceroyalty: a critical survey
  • Surya-Gita: sun songs together with second editions of ’The garland of life’ and ʻMoulted feathers’
  • Introduction to Tantra Sastra
  • Isopanisad
  • Saundarya - Lahari
  • Sri Visnu Sahasranama
  • Hymns to the Goddess and Hymn to Kali
  • Art and Swadeshi
  • Pictures of India
  • The King's Wife
  • The Dawan over Asia
  • The Seed of Race
  • Sakthi and Sakta
  • Bharatha Shakti
  • A seminar on saints
  • A Tibetan banner
  • A voice from prison
  • Appreciating Carnatic music
  • The seed of race: an essay on Indian education
  • Heroes of the Hour
  • Ode to Truth
  • The Kingdom of Youth
  • The Garland Life
  • The Renaissance in India
  • The awakening of Asian womanhood
  • Sri Krishna the saviour of humanity
  • Sketches of Indian Economics
  • The awakening of Asian womanhood
  • The Chirala-Perala tragedy: an episode of voluntary exile
  • Sir Sankaran Nair's minutes of dissent
  • Freedom's battle: being a comprehensive collection of writings and speeches on the present situation
  • Practice of Yoga: Various practical methods in yoga and meditation, stage by stage
  • Work and worship: Essays on culture and creative Art
  • Heroes of the hour: Mahatma Gandhi, Tilak Maharaj, Sir Subramanya Iyer
  • Dry America An object-lesson to India
  • Mahatma Gandhi: his life writings and speeches
  • Muhammad Ali: his life, services and trial
  • Muhammad Ali: his life and services to his country
  • Bal Gangadhar Tilak: his writings and speeches
  • Krishna's flute
  • Non-co-operation
  • Manu a study in Hindu social theory
  • Hon. Pandit Madan Mohan Malaviya
  • Lala Lajpat Rai
  • Indian home rule
  • The Indian nation builders
  • The soul of India
  • Swami Ram Tirtha His Life and Teachings
  • Babu Surendranath Banerjee
  • Revived Memories
  • The Aryan ideal
  • The Message of the East
  • Is India Civilized? Essays on Indian Culture
  • swami Dayanand Saraswathi his life and teachings
  • Champak leaves
  • Dialogues in an ashram
  • Essentials of food and nutrition
  • Gems from the Veda
  • Hand book of food and nutrition
  • Heroes of the hour
  • How India can be free
  • Hymn to Kali Karpuradi-Stotra
  • Hymns to the goddess
  • India arisen
  • India in chains
  • India's ancient literature
  • Kamakala Vilasa
  • Lights on the Tantra
  • Mahamaya
  • Bepin Chandra Pal
  • Muhammad Ali
  • Our food
  • Poet-philosophers of the Rigveda
  • Principles of Tantra
  • Sir Jagadish Chunder Bose, his life and speeches
  • Six mystics of India
  • Songs of dreams
  • Sparks from a divine anvil
  • The Aryan ideal
  • The Atharva Veda Vratyakanda
  • The call of the Jagadguru
  • The fundamentals of Vedanta philosophy
  • The garland of letters
  • The great liberation
  • The great trial of Mahatma Gandhi & Mr. Sankarlal Banker
  • The oppression of the poor
  • The philosophy of Panchatantra
  • The scourge of Christ
  • The serpent Power
  • The sleeper awakened
  • The Upanishads
  • To awaking India
  • Urge divine
  • Wealth, beauty and youth for all
  • Yoga - Yajnavalkya

மதிப்பீடு

கணேஷ் அண்ட் கம்பெனி, தமிழின் முன்னோடிப் பதிப்பக நிறுவனங்களுள் ஒன்று. இந்திய சுதந்திரப் போராட்டத்தை மையப்படுத்தியும், தேசிய உணர்ச்சியைத் தூண்டும் வகையிலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை வெளியிட்டது. சமய, ஆன்மிகத் தத்துவ நூல்களை வெளியிட்டது. தமிழின் தொடக்க காலப் பதிப்பகங்களுள் ஒன்றாக அறியப்படுகிறது. நூறாண்டுகளைக் கடந்து இன்றும் செயல்பட்டு வருகிறது.

உசாத்துணை


✅Finalised Page