எம். வீரராகவன்
எம். வீரராகவன் (பிறப்பு: 1948) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர்களில் ஒருவர். வாத்தியார். தெற்கத்தி பாணிக் கூத்துக் கலைஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
எம். வீரராகவன் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஆத்திக்குப்பத்தில் 1948-ல் பிறந்தார். கூத்து இல்லாத காலங்களில் விவசாயம் பார்ப்பார்.
கலை வாழ்க்கை
எம். வீரராகவனின் வாத்தியார் நடேச ஆசிரியர். வீரராகவன் தெற்கத்தி பாணி கூத்துக்கள் ஆடினார். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கூத்து அனுபவம் உள்ளவர். வெற்றி விநாயகர் நாடக சபா, தேவியானந்தல் ராமசாமி சபா, ஆனத்தூர் சீனிவாசன் சபா, புதுப்பாக்கம் நடேசன் சபா ஆகிய குழுக்களில் கூத்து ஆடினார். சித்தி விநாயகர் நாடக சபாவில் கூத்து வாத்தியாராக இருந்தார்.
எம். வீரராகவன் கூத்து ஆரம்ப காலங்களில் பெண் வேடம், நாரதர் வேடம் ஆகிய வேடங்களில் ஆடினார். பின்னர் கதாநாயகன், அசுர வேடங்களில் நடித்தார். துச்சாதனன், கீசகன் வேடங்களில் நடித்தார். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பண்ருட்டி, காடம்மலியூர், வடநாட்டில் கீழ்வட்டம், செய்யூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய இடங்களில் கூத்து ஆடினார்.
மாணவர்கள்
எம். வீரராகவனிடம் கற்றுக் கொண்ட பலரும் கூத்து வாத்தியார்களாகவும் உள்ளனர்.
- பண்ருட்டி தணிகாசலம்
- தேவியாநந்தல் கண்ணன்
- பண்ருட்டி தாழம்பட்டு செல்வராசு
பங்கேற்ற கூத்துகள்
- மகாபாரதக் கூத்துக்கள்
- ராமாயணம்
- நாவல்ஸ்
உசாத்துணை
- தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Dec-2024, 19:12:12 IST