under review

எமன் கந்தசாமி

From Tamil Wiki
கந்தசாமி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கந்தசாமி (பெயர் பட்டியல்)

எமன் கந்தசாமி (பொ.யு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் நாடக நடிகர். சங்கரதாஸ் சுவாமிகளின் மாணவர்.

வாழ்க்கைக் குறிப்பு

எமன் வேடம் அணிந்து நடித்ததால் எமன் கந்தசாமி என்று அழைக்கப்பட்டார். தூத்துக்குடியைச் சேர்ந்தவர். நாடகத்தைவிட்டு விலகிய பின் வேறு வேலைகள் பல செய்தார்.

நாடக வாழ்க்கை

எமன் கந்தசாமி சங்கரதாஸ் சுவாமிகளின் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில் எமன், இரணியன், கடோத்கஜன் ஆகிய வேடங்களில் நடித்தார். அதற்கேற்ற பெரிய உடல்வாகு கொண்டிருந்தார். 1922-ல் நாடகத்தைவிட்டு விலகினார்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Jul-2024, 07:56:37 IST