under review

எண்களின் சிறப்பு: எண் 2

From Tamil Wiki

எண்ணிக்கையைக் குறிப்பதற்கு எண்கள் பயன்படுகின்றன. எண்கள் ஒன்று தொடங்கி கோடிக்கும் மேல் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் எண் 2 ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் சிறப்பிக்கப்பட்ட எண்.

எண் 2-ன் சிறப்புகள்

ஒன்றிலிருந்து தொடங்கும் எண் வரிசையில் இரண்டாவதாக வருவது 2. இரண்டு என்றும், இலக்கியங்களில் ‘இரு’, ‘இருமை’ என்றும் இவ்வெண் எடுத்தாளப்பட்டுள்ளது.

இலக்கியச் சிறப்புகள்

  • இருமை – நன்மை, தீமை என இரண்டு வகைமையைக் குறிக்கும். (இருமை வகை தெரிந்து – குறள்)
  • இரு திணை – உயர் திணை, அஃறிணை
  • இரு நிதி – சங்க நிதி, பதும நிதி
  • இருபான் – இரண்டு பத்து (இருபது)
  • இருபது – இரண்டு பத்து
  • இருபா இருபஃது – வெண்பாவும், அகவற்பாவும் மாறி மாறி வரும் சிற்றிலக்கிய வகை.
  • இரு பிறப்பாளன் – அந்தணன்
  • இரு புனல் – தேங்கும் நீர் மற்றும் ஓடும் நீர்
  • இரு பூ - இரு போகம் (கன்னிப்பூ, கும்பப் பூ)
  • இரு பொருள் – கல்வி, செல்வம்
  • இரு பொழுது – காலை, மாலை
  • இரு வழி – தாய் மற்றும் தந்தை வழி மரபு
  • இரு மா – ஒரு பின்னம். பத்தில் ஒன்று 1/10
  • இரு வினை – நல்வினை, தீவினை
  • இரட்டை - இரண்டு
  • இரட்டைக் கிளவி – இரண்டாக இணைந்து வந்தால் மட்டுமே பொருள் தரும் சொற்றொடர்.
  • இரட்டை மணிமாலை – சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
  • இரட்டை விருத்தம் – பதினோரு சீர்க்கும் மேற்பட்ட சீர்களால் வரும் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
  • இரண்டகம் – துரோகம்
  • இரண்டாம் கட்டு – வீட்டின் இரண்டாம் பகுதி
  • இரண்டுங் கெட்டான் – நன்மை, தீமை அறிய இயலாதவன்
  • இரண்டு படுதல் – பிரிதல், பிளவு படுதல்.

ஆன்மிகச் சிறப்புகள்

  • ஆத்மா = ஜீவாத்மா, பரமாத்மா என இரண்டு
  • இதிகாசம் - இராமாயணம், மகாபாரதம் என இரண்டு
  • இருமை – இம்மை, மறுமை என இரண்டு
  • இரு கண் - ஊனக் கண், ஞானக் கண் என இரண்டு
  • இரு சுடர் – சூரியன், சந்திரன் எனும் இரண்டு சுடர்கள்
  • இரு வகை அறம் - இல்லறம், துறவறம்
  • இருவகை வாசனை – நல் வாசனை, தீய வாசனை

உசாத்துணை

  • நவம்: நாஞ்சில் நாடன்: சிறுவாணி வாசகர் மைய வெளியீடு: பவித்ரா பதிப்பகம்: முதல் பதிப்பு: ஏப்ரல், 2017


✅Finalised Page