under review

உள்கோள் (கைக்கிளை)

From Tamil Wiki

உள்கோள் கைக்கிளைத் திணையின் துறைகளில் ஒன்று. ஆண்பால் கூற்றாக அமைந்தது. உள்கோள்-உள்ளத்தில் கொள்ளுதல். தான் கண்ட பெண்ணைக் குறித்த தலைவனின் உணர்வுகளைக் கூறும் துறை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் மாலை அணிந்த இப்பெண் என் மனத்தில் இருந்தும் என்னை அறியாதவளாய் இருக்கிறாள் எனத் தலைவன் உள்ளத்திலே எண்ணம் கொள்வது என்று கூறுகிறது. தலைவனின் உணர்வு இங்கு கூறப்படுகிறது.

இணர்ஆர் கோதை என் நெஞ்சத்து இருந்தும்
உணராள் என்னை என உள் கொண்டன்று
(கொளு 14.4)

வெண்பா

கவ்வைப் பெருக கரந்து என் மனத்திருந்தும்
செவ்வாய்ப் பெரும்தோள் திருநுதலாள் - அவ்வாயில்
அஞ்சொல் மாரி பெய்து அவியாள்
நெஞ்சம் பொத்தி நிறைசுடும் நெருப்பே (288)

பொருள்: என் மனத்திலே கலந்த காமத்தீ என் ஆற்றலைச் சுடுகின்றது; சிவந்த இதழ்களையும் அழகிய நெற்றியையுமுடைய இவள் என் நெஞ்சிலேயே இருந்தும் தன் இனிய சொற்களால் அத்தீயை அவியாது இருக்கிறாளே!

உசாத்துணை

கைக்கிளைத் திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Jul-2025, 20:11:08 IST