under review

இற்கொண்டு புகுதல்

From Tamil Wiki

இற்கொண்டு புகுதல்(இல்கொண்டு புகுதல்) பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. வீரமரணம் அடைந்தவர் நினைவாக நடப்பட்ட கல்லுக்குக் கோயில் எழுப்புதலைக் குறிக்கிறது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

வேத்தமருள் இளிந்தோன் கல் என
ஏத்தினர் துவன்றி இல் கொண்டு புக்கன்று(கொளு 10.14)

வெண்பா

வாள்புகா ஊட்டி வடிமணி நின்று இயம்பக்
கோட்புலி அன்ன குரிசில் கல் - ஆள்கடிந்து
வில்கொண்ட வென்றி விறல் மறவர் எல்லோரும்
இல்கொண்டு புக்கார் இசைந்து (253)

பொருள்: பகையரசரது வீரரைத் தன் வில்லாற்றலால் வென்ற திறல்வீரர் எல்லோரும், கொல்லும் புலியையொத்த தலைமையுடைய தன் தலைவனின் நடுகல்லிலுக்குக் கோயில் எடுத்து, வாளுக்கு உணவு கொடுத்துத், தெளிந்த மணியோசை நிலையாக ஒலிக்கக் கூடி, அக் கோயிலிலுள்ளும் புகுந்து அவனைப் போற்றுவாராயினர்.

உசாத்துணை

பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Jun-2025, 10:55:27 IST