under review

இர்பானா ஜப்பார்

From Tamil Wiki

இர்பானா ஜப்பார் (பிறப்பு: செப்டம்பர் 21, 1968) ஈழத்துப் பெண் எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

இர்பானா ஜப்பார் இலங்கை காலியில் ஸெய்ன் அலி, ஸித்தி கலிமா இணையருக்கு செப்டம்பர் 21, 1968-ல் பிறந்தார். ஆரம்பக்கல்வியை தர்கா நகர் அல் ஹம்றா மகா வித்தியாலயத்திலும் இடைநிலை, உயர் கல்வியை களுத்துறை அளுத்கம வீதி முஸ்லிம் தேசிய மகளிர் கல்லூரியிலும் கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

இர்பானா ஜப்பார் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எழுதிய முதலாவது சிறுகதை 'வசந்தம் வந்த போது' தினகரன் பத்திரிகையில் வெளிந்தது. இவரின் ஆக்கங்கள் தினகரன், சிந்தாமணி, தினபதி ஆகிய நாளிதழ்களிலும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையிலும் வெளிவந்தன. 'துணிவின் எல்லை' என்னும் நாவலும், 'புதுமைப்பெண்' எனும் சிறுகதைத் தொகுப்பும் 1992-ம் ஆண்டு கல்ஹின்ன தமிழ் மன்றத்தினால் வெளியிடப்பட்டன.

நூல் பட்டியல்

நாவல்
  • துணிவின் எல்லை
சிறுகதைத் தொகுப்பு
  • புதுமைப்பெண்

உசாத்துணை


✅Finalised Page