under review

இராமலிங்கச் சட்டம்பியார்

From Tamil Wiki

To read the article in English: Ramalinga Sattambiar. ‎


இராமலிங்கச் சட்டம்பியார் (19-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஆசிரியர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இராமலிங்கச் சட்டம்பியார் 19-ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பரமானந்தரின் மகனாகப் பிறந்தார். சேதுநாதர் என்பவரிடம் கல்வி கற்றவர். ஆசிரியராகப் பணியாற்ரினார்.

இலக்கிய வாழ்க்கை

ஆசிரியராகப் பணிபுரிந்ததால் சட்டம்பியார் என்றழைக்கப்பட்டார். புங்குடுதீவு கேரநகர் அரிகரபுத்திரர் பதிகம், கப்பற்பாட்டு, புயற்பாட்டு ஆகியவை இவர் எழுதிய நூல்கள். வித்துவான் கனகசபை இவரின் நூல்களைத் தேடி பதிவேற்றியுள்ளார்.

நூல்கள் பட்டியல்

பதிகம்
  • புங்குடுதீவு கேரநகர் அரிகரபுத்திரர் பதிகம்
பாட்டு
  • கப்பற்பாட்டு
  • புயற்பாட்டு

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:07:21 IST